முஸ்லிம்களுக்கு எதிரான சதியல்ல, அநீதி நடந்துள்ளது - ஜனாதிபதியின் செயலாளர் ஒப்புதல்
வில்பத்து வனப்பகுதியுடன் இணைந்த நான்கு வனப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக பெயரிடும் வர்த்தமானி அறிவித்தல் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதியல்ல. ஆனால் இதில் அநீதி நடந்துள்ளது என ஏற்றுக்கொள்கிறேன்.
இவ்விவகாரத்தில் எவருக்கும் பாதிப்பில்லாது தீர்வொன்று விரைவில் பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. அபேகோன் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பிரகடனப்படுத்தப்பட்ட வனப்பிரதேசங்கள் வனஜீவராசிகள் வலயமாகவும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. என்றாலும் அத்திட்டம் தற்போது கைவிடப்பட்டுவிட்டது. ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வனப் பிரகடன வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அப்பிரதேச மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத தீர்வொன்று விரைவில் எட்டப்படும்.
முஸ்லிம்களுக்கு விரோதமாகவோ அல்லது வேறெந்த நோக்கத்துக்காகவோ இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை. அப்பிரதேச எல்லைகளில் வாழும் முஸ்லிம்களை பாதுகாப்பதற்காகவே இப்பிரகடனம் வெளியிடப்பட்டது. சில தவறுகள் இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொள்கிறேன். அத்தவறுகள் திருத்திக்கொள்ளப்படும் என்றார்.
நம்பிட்டோடோம்ம்!!???!! துரோகத்தில்,பல உண்டு அதில் இதுவும் ஒன்று கிடைக்கும் ஆனால் கிடையாது .,,. வெட்கம் இல்லாமல் திரும்பவும் பிச்சைக்காரன் வருவானுகள் துனையாக நமது (மு) நக்கும் நாய்கள் கூட..,
ReplyDelete