முஸ்லிம்களுக்கு எதிரான ஜனாதிபதி, போராட்டம் ஆரம்பம்..!
மன்னார் முசலி பிரதேசத்தில் உள்ள அதிகமான பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன புதிய வர்த்தமானியில் கையொப்பம் இட்டதை தொடர்ந்து வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக ஜனாதிபதி ரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் நேற்று மாலை மறிச்சிகட்டி, பாலைக்குழி மற்றும் கரடிக்குழி மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றையதினம் போட்டத்தை ஆரம்பித்த அம்மக்கள் இதுகுறித்து தெரிவிக்கையில்,
பல வருடகாலமாக நாங்கள் வாழ்ந்த காணிகளை வில்பத்து பிரதேசமாக பிரகடனப்படுத்தியதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஓரு போதும் எங்கள் தாய் மண்ணை விட்டு வெளியேற மாட்டோம் என்றும் நேற்றுக்கூட ஜனாதிபதிக்கு எங்கள் கோரிக்கையினை முசலி பிரதேசத்தில் உள்ள அனைத்து சமூக மட்ட அமைப்புக்கள் ஊடாக அனுப்பி இருக்கின்றோம்.
கடந்த ஆட்சி காலத்தில் எங்களுக்கு அநியாயம் இடம்பெற்றதாகத் தெரிவித்து தான் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கினோம். ஆனால் இந்த அரசாங்கம் எங்களுக்கு நல்லதை செய்யாமல் எங்கள் உறவுகள் பரம்பரையாக வாழ்ந்த காணியினை கொள்ளை அடிக்கும் சூழ்ச்சி வேலைகளை செய்துள்ளது.
எங்கள் போராட்டத்திற்கு கட்சி அரசியலுக்கு அப்பால் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம். இதற்கு ஜனாதிபதி நீதியான தீர்வொன்றினை வழங்கும்வரை போராட்டம் தொடருமெனத் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் அமைச்சர்களே! பாராளுமன்ற உறுப்பினர்களே, மற்றும் ஏனைய சிவில் சமூக அமைப்புகளே ஏன் இன்னும் மௌனம். எங்களது சகல உரிமைகளையும் இழந்த பிறகா நீங்கள் பேசப்போகிறீர்கள். தேர்தல் காலத்தில் கத்தின உங்களுக்கு, உத்தரவாதம் வழங்கிய உங்களுக்கு இப்போ என்னாச்சி. ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க முடியலையா. இல்ல பயமா? பிரச்சனையென்று வரும்போது அது எல்லோருக்கும்தான். அதை முலையில் கிள்ளுவதுதான் சாலச்சிறந்தது.
ReplyDeleteஇனியும் நாங்கள் அரசியல்வாதிகளை நம்புவது எங்களது மடைமையே. அது சிங்கள அரசியல்வாதிகளாக இருக்கட்டும். முஸ்லிம் அரசியல்வாதிகளாக இருக்கட்டும். இனி எந்த அரசாங்கம் வந்தாலும் அவர்கள் சிங்கள இனவாதிகளை திருப்தி படுத்தவே முனையும். அவர்களுக்கு தெரியும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பதவி மட்டும் கொடுத்தால் போதுமென்று.
DeleteStill our community trusting yahapalane government
ReplyDeleteஎங்கே எமது பூச்சாண்டிகள்? அமைச்சர் மௌன விரதமா? நல்லாட்சியின் காரணகத்தாக்களை முஸ்லிம் சமுதாயமும் தேடுகிறது.வருவார்கள் தேர்தல் வரும் போது வருவார்கள்...
ReplyDeleteஎன்னப்பா SLTJ ஏன் மௌனம்?,எங்கே இந்த பேனா வீரா்கள்? எங்கே போனாா்கள்? இந்த SLTJ எடுக்கும் முயற்சிகளுக்கு இடைஞ்சல் கொடுக்கும் ஜமாத்துகள்?
ReplyDeleteஇந்த விடயத்திலாவது ஒன்று பட்டு உழைப்போம்
This man is most dangerous man.He is avenging those who defeated Mahinda and his party SLFP.He is not common candidate.He deceived not only Muslim but 6.2 million voters who voted for him.He is in power because of UNP but completely ignore them and rushed to protect SLFP soon after his victory.If he is genuine leader he should have stood neutral bu switched side showing his true color
ReplyDeleteHe appointed Mahinda's man Hisbullah but ignored MR.Asath Sally who stood firmly by the side of President.But what is strange is that Muslim politicians still not understand his evil nature that he is very close to BBS and "Sinhale"