Header Ads



தலாக் செல்லாது என அறிவிப்பது, அல்குர்ஆனை திருத்துவதற்கு சமம் - உயர் நீமன்றத்தில் அதிரடி வாக்குமூலம்

தலாக் முறை செல்லாது என்று அறிவித்தால், அது அல்லாவின் உத்தரவை அவமதிப்பதற்கு சமம். மேலும், புனித நூலான குரானை திருத்துவதற்கு சமம் என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.

முஸ்லிம் மத வழக்கப்படி, மூன்று முறை தலாக் என்ற வார்த்தையை உச்சரிப்பதன் மூலம், சட்டப்பூர்வ மனைவியை விவாகரத்து செய்துவிடலாம் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வருகின்றன. இந்த வழக்கின் ஒரு பகுதியாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்(ஏஐஎம்பிஎல்பி) தனது எழுத்துப்பூர்வமான வாதத்தை வழக்கறிஞர் இஜாஸ் மக்பூல் மூலம் தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில் ஏஐஎம்பிஎல்பி கூறியிருப்பதாவது:

முஸ்லிம்கள் தங்கள் மத வழக்கப்படி தனிநபர் சட்ட நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். இந்த நடைமுறைக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25-ல் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இச்சட்ட பிரிவின்படி, இந்திய குடிமகன் ஒருவர் தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றிக் கொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ளது.

அல்லாவின் உத்தரவின்படியும், அவரது தூதர்களின் வழிகாட்டு தலின்படியும், புனித நூலான குரானில் குறிப்பிட்டுள்ள மூன்று தலாக் முறையை முஸ்லிம்கள் பின்பற்றி வருகின்றனர். புனித நூலில் குறிப்பிட்டுள்ள ஒரு வாசகத்தை சாதாரணமாக விமர்சிக்க அனுமதிப்பது அதை அவமதிக்கும் செயலாகும். இச்செயலை அனுமதித்தால் இஸ்லாம் என்ற மார்க்கமே இல்லாமல் போய்விடும்.

மூன்று முறை தலாக் உச்சரித்து விவாகரத்து செய்யும் நடைமுறை முஸ்லிம் மத வழக்கத்தில் அசாதாரணமான நிகழ்வு என்றாலும், அது அல்லாவின் நேரடி வாசகங்கள் என்பதால் அதை செல்லாது என்று அறிவிக்க முடியாது. புனித குரான்படி, அது கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை. ஒருவர் மூன்று முறை தலாக் கூறியதும், மனைவி விவாகரத்து பெற்றவரா கிறார். அதன்பின், ‘ஹலாலா’ முறைப்படி அவர் நடந்தால் மட்டுமே, இந்த விவாகரத்து நடை முறையை திரும்பப் பெற்று அவர் மீண்டும் மனைவியாக முடியும். அதாவது விவகாரத்து பெற்ற மனைவி, தனக்கு விவகாரத்து வழங்கிய கணவரை தவிர்த்து வேறு ஆணை தனது விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த திருமணம் கணவனின் மரணத்தாலோ, விவாகரத்து நடைமுறையின் மூலமோ முடிவுக்கு வந்தால் மட்டுமே, அவர் முதல் கணவருடன் மீண்டும் சேர முடியும். இந்த நடைமுறை குரானில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரம் இல்லை

முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் தலையிட உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. குரான் நடைமுறையை மாற்றுவது அல்லாவின் உத்தரவை மீறும் செயலாகும்; புனித நூலை அவமதிக்கும் செயலாகும். அல்லாவின் உத்தரவை மீறும் முஸ்லிம் ஒருவர் பாவம் செய்தவராகி விடுவார்.

முஸ்லிம் மதத்தைப் பின்பற்றும் ஒருவர் அல்லாவின் உத்தரவையும் குரானில் கூறப்பட்டுள்ள நடை முறைகளையும் பின்பற்றுவது கட்டாயம். எதைச் செய்யக் கூடாது என்று குரான் சொல்லியிருக்கிறதோ, அதை செய்யாமல் இருப்பதும் முஸ்லிம் ஒருவரின் கடமை. மேலும், தலாக் முறையை ரத்து செய்தால், குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் சொத்துரிமையும் பாதிக்கப்படும். இந்த நடைமுறையை ரத்து செய்வது குரானை திருத்தி எழுதும் செயலாகும். இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படையையே மாற்றி அமைத்துவிடும். எனவே, தலாக் நடைமுறையை ரத்து செய்யக் கூடாது.

இவ்வாறு முஸ்லிம் வாரியம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

நன்றி.

இந்து

13 comments:

  1. அதிரடி வாக்குமூலம் என்று சொல்லி இஸ்லாமியர்களின் உணர்ச்சிகளை கொந்தளிக்க வைப்பது அறிவீனம் ஆகும். எது பொருத்தமில்லையோ, அது கட்டாயம் திருத்தப்படவே வேண்டும். மாற்றம் ஒன்றே நிலையானது, அனைத்தும் மாறியே தீர வேண்டும், எந்தப் புனித நூற்களும் புனிதமும் இல்லை, மாற்றத்திற்கு அப்பாற்பட்டவையும் அல்ல.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மதம் போல் இஸ்லாத்தையும் நீங்கள் எடைபோடமுடியாது.ஒரு கருத்தைத் தெரிவிக்குமுன் அது தொடர்பான ஆழமான அறிவு வேண்டும். முதலில் குர் ஆனைப்படித்துவிட்டு பின்பு கருத்துக் கூறுங்கள் சகோதரரே.

      Delete
  2. you fucking Mr. Nilaven Marks if you do not know anything about Holy Quran and Islamic Law do not comment anything on that

    ReplyDelete
  3. Punitha quraanil ithuvari entha maatramum nadanthu illay nadaka povathum illay neer thali keelaai nindaalu seriye 1400 varudangaluku mun eppadi irunthatho appadiye ippavum ullathu eppaothum appadiye irukum.
    mudinthaal al quraanil oru kuraiyai kandu pidi paarpom mudiyumaa unnaal???!!!

    ReplyDelete
  4. அவர்கள் இந்த
    குர்ஆனை
    (கவனமாக)
    சிந்திக்க
    வேண்டாமா, (இது)
    அல்லாஹ் அல்லாத
    பிறரிடமிருந்து
    வந்திருந்தால்,
    இதில் ஏராளமான
    முரண்பாடுகளை
    அவர்கள்
    கண்டிருப்பார்கள்.
    (அல்குர்ஆன் : 4:82

    ReplyDelete
  5. கொடுமை என்னவெனில் புனித அல் குர்ஆனையே வாசித்திராத அறி(விலி)வுக் கூட்டம் அதை விமர்சிப்பது!!!முதலில் முழுமையாக வாசித்து விட்டு வா பின்னர் உன் அறி(விலி)வு ஞானத்தால் ஒரு வசனத்தையேனும் மாற்ற முடியுமா என முயற்சி செய்து பார்!!!!

    ReplyDelete
  6. கட்டுரையாளா் விரிவை அஞ்சி எழுதியுள்ளாா் போலும்,தலாக் விடயமாக குா்ஆன்,ஹதீஸ் கூறியவை மிகச்சிறந்த வழிமுறை,மாற்றத்துக்கு தேவையே இல்லை என்பதை இந்த நிலவன் மாா்க்ஸ் குா்ஆன்,ஹதீஸ் கூறியதை விவரமாக அறிந்து கொள்ள தமிழ் நாட்டில் தவ்ஹீத் ஜமாத்தை அல்லது குா்ஆன்,ஹதீஸ் மாத்திரம் பின்பற்றக் கூடியவா்களை அனுகினால் நல்லது இங்கு கொமன்ட்ஸ் எழுதிய என் அன்புக்குறியவா்கள்,மற்றும் நான் நல்ல சிந்தனையுடன் இந்த நிலவன் மாா்க்ஸ் அவா்களை நோக்குவோம்,மறைவான ஞானம் அல்லாஹ் ஒருவனுக்கே!

    ReplyDelete
  7. Mr. Nilavan markes...it hs been already adviced to u by somany brothrs to refrain from posting these kind of nonsense comnts. and f u wnt to put ur nose into islamic mttrs, pls read d quran nd cmnt. Smtime f ur heart is open accordng to almighty allah evn u also may embrace islam...becos im pretty sure u r not smart as einstain or bernadsha or pop...those pepl also cudnt deny d facts of quran nd islam...go nd read my dear brothr
    Wsh u all d bst

    ReplyDelete
  8. Brother Nilavan Marks, please read alquran & hadith in the language you understand. If you find any mistakes or shortcoming pls bring them with facts. There are so many islamic scholars out there to answer them. Otherwise no point just posting irrelevant comments here.
    My dear islamic brother pls use the propper language when you re-comment. Admin also make sure patron of this page use this page wisely.

    ReplyDelete
  9. Mr.zah அந்நிய மதத்தினருக்கு அறிவுரை வழங்கும் பொது ( அவர் எவ்வளவு தூஷித்து எழுதி பேசி இருந்தாலும்) முதலில் பேசும், எழுதும் வார்த்தைகளில் ஒழுக்கத்தை கடைபிடியுங்கள். தூசன வார்த்தைகள் முற்று முழுதாக தவிர்த்து எழுதுங்கள்.

    ReplyDelete
  10. வந்துட்டான்யா வந்துட்டான்! காமடி கிங். Guys do not waste your time arguing with him. Even if you answer to people who already know about Islam better than you, he will not accept it rather he will answer a question with another question.
    He doesn't come here to understand Islam he is here to play with your mind. He is very good at it. The missionaries are very good at it.

    ReplyDelete
  11. Please follow your religion before advising it . mr.Zah u have to mind about your words. Speaking a contradictory word and explaining the Islam is not appropriate. U have to brush your words to be nice and polite first.

    ReplyDelete

Powered by Blogger.