சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும், இலங்கையரை பதிவுசெய்வது ஆரம்பம்
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்து தொழில் புரியும் இலங்கையர்களைபதிவு செய்வதற்கான நடவடிக்கை இன்றைய -29- தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பொது மன்னிப்பு காலம் வழங்கியதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த இலங்கையர்களுக்கு சட்டபூர்வமான பயண ஆவணங்களை, தூதரகம் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment