Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான ஜனாதிபதி, போராட்டம் ஆரம்பம்..!


மன்னார் முசலி பிர­தே­சத்தில் உள்ள அதி­க­மான பூர்­வீக இடங்­களை வில்­பத்து வன பகு­திக்­கான எல்­லை­யாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிரி­சேன புதிய வர்த்­த­மா­னியில் கையொப்பம் இட்­டதை தொடர்ந்து வர்த்­த­­மானி அறி­வித்­தலை உட­ன­டி­யாக ஜனா­தி­பதி ரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்­கை­யுடன் நேற்று மாலை மறிச்­சி­கட்டி, பாலைக்­குழி மற்றும் கர­டிக்­குழி மக்கள் போராட்­டத்தை ஆரம்­பித்துள்­ளனர்.

நேற்­றை­ய­தினம் போட்­டத்தை ஆரம்­பித்த அம்­மக்கள் இது­கு­றித்து தெரி­விக்­கையில், 

பல வரு­ட­கா­ல­மாக நாங்கள் வாழ்ந்த காணி­களை வில்­பத்து பிர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யதை நாங்கள் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம். ஓரு போதும் எங்கள் தாய் மண்ணை விட்டு வெளி­யேற மாட்டோம் என்றும் நேற்றுக்கூட ஜனா­தி­ப­திக்கு எங்கள் கோரிக்­கை­யினை முசலி பிர­தே­சத்தில் உள்ள அனைத்து சமூக மட்ட அமைப்­புக்கள் ஊடாக அனுப்பி இருக்­கின்றோம்.

கடந்த ஆட்சி காலத்தில் எங்­க­ளுக்கு அநி­யாயம் இடம்­பெற்­ற­தாகத் தெரி­வித்து தான் இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கினோம். ஆனால் இந்த அர­சாங்கம் எங்­க­ளுக்கு நல்­லதை செய்­யாமல் எங்கள் உற­வுகள் பரம்­ப­ரை­யாக வாழ்ந்த காணி­யினை கொள்ளை அடிக்கும் சூழ்ச்சி வேலை­களை செய்துள்ளது.

எங்கள் போராட்­டத்­திற்கு கட்சி அர­சி­ய­லுக்கு அப்பால் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம். இதற்கு ஜனாதிபதி நீதியான தீர்வொன்றினை வழங்கும்வரை போராட்டம் தொடருமெனத் தெரிவித்துள்ளனர்.

6 comments:

  1. முஸ்லிம் அமைச்சர்களே! பாராளுமன்ற உறுப்பினர்களே, மற்றும் ஏனைய சிவில் சமூக அமைப்புகளே ஏன் இன்னும் மௌனம். எங்களது சகல உரிமைகளையும் இழந்த பிறகா நீங்கள் பேசப்போகிறீர்கள். தேர்தல் காலத்தில் கத்தின உங்களுக்கு, உத்தரவாதம் வழங்கிய உங்களுக்கு இப்போ என்னாச்சி. ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க முடியலையா. இல்ல பயமா? பிரச்சனையென்று வரும்போது அது எல்லோருக்கும்தான். அதை முலையில் கிள்ளுவதுதான் சாலச்சிறந்தது.

    ReplyDelete
    Replies
    1. இனியும் நாங்கள் அரசியல்வாதிகளை நம்புவது எங்களது மடைமையே. அது சிங்கள அரசியல்வாதிகளாக இருக்கட்டும். முஸ்லிம் அரசியல்வாதிகளாக இருக்கட்டும். இனி எந்த அரசாங்கம் வந்தாலும் அவர்கள் சிங்கள இனவாதிகளை திருப்தி படுத்தவே முனையும். அவர்களுக்கு தெரியும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பதவி மட்டும் கொடுத்தால் போதுமென்று.

      Delete
  2. Still our community trusting yahapalane government

    ReplyDelete
  3. எங்கே எமது பூச்சாண்டிகள்? அமைச்சர் மௌன விரதமா? நல்லாட்சியின் காரணகத்தாக்களை முஸ்லிம் சமுதாயமும் தேடுகிறது.வருவார்கள் தேர்தல் வரும் போது வருவார்கள்...

    ReplyDelete
  4. என்னப்பா SLTJ ஏன் மௌனம்?,எங்கே இந்த பேனா வீரா்கள்? எங்கே போனாா்கள்? இந்த SLTJ எடுக்கும் முயற்சிகளுக்கு இடைஞ்சல் கொடுக்கும் ஜமாத்துகள்?
    இந்த விடயத்திலாவது ஒன்று பட்டு உழைப்போம்

    ReplyDelete
  5. This man is most dangerous man.He is avenging those who defeated Mahinda and his party SLFP.He is not common candidate.He deceived not only Muslim but 6.2 million voters who voted for him.He is in power because of UNP but completely ignore them and rushed to protect SLFP soon after his victory.If he is genuine leader he should have stood neutral bu switched side showing his true color

    He appointed Mahinda's man Hisbullah but ignored MR.Asath Sally who stood firmly by the side of President.But what is strange is that Muslim politicians still not understand his evil nature that he is very close to BBS and "Sinhale"

    ReplyDelete

Powered by Blogger.