Header Ads



இஸ்­லா­மிய போத­னை­க­ளுக்­கு வரு­ப­வர்­க­ளுக்கு, விசா வழங்­கல் முறை­களில் திருத்­தம் செய்­யுங்கள்

இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ், இந்­தோ­னே­சியா, சிரியா போன்ற பல்­வேறு  நாடு­க­ளி­லி­ருந்து மத பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­கவும், இஸ்­லா­மிய போத­னை­க­ளுக்­கா­கவும் வருகை தரு­ப­வர்­க­ளுக்கு விசா வழங்­கு­வதில் கையா­ளப்­படும் முறை­களில்  திருத்­தங்­களைச் செய்­யு­மாறு முஸ்லிம்  சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் அர­சாங்­கத்தைக் கோர­வுள்ளார். 

விசா பெற்­றுக்­கொள்­வதில் ஏற்­படும்  கால­தா­மதம் மற்றும் இந்­தியா போன்ற நாடு­க­ளி­லி­ருந்து வருகை தந்து இங்கு  தங்­கி­யி­ருக்கும் தரீக்கா தங்கள்மாருக்கு  Free Visa  வழங்­கப்­ப­டு­வது நிறுத்­தப்­பட்­டுள்­ளமை போன்ற கார­ணங்­க­ளை­ய­டுத்தே அமைச்சர் ஹலீம்  இத்­தீர்­மா­னத்தை மேற்­கொண்­டுள்ளார். 

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து மத பிர­சார  நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­கவும், மத்­ர­ஸாக்­க­ளுக்கும், அர­புக்­கல்­லூ­ரி­க­ளுக்கும் இஸ்லாம் பாடத்தை போதிப்­ப­தற்­கா­கவும் வருகை தரு­ப­வர்­களின் விசா தொடர்பில் ஏற்­பட்­டுள்ள நடை­முறைப் பிரச்­சி­னைகள் தொடர்­பாக ஆராயும்,  கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்­றுக்­காலை முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சில் அமைச்சர் எம்.எச்.எம் ஹலீம் தலை­மையில் நடை­பெற்­றது. 

இக்­க­லந்­து­ரை­யா­டலில் அமைச்சின் மேல­திக செய­லாளர் முஸ்லிம் சமய பண்­பாட்­டா­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பதில் பணிப்­பாளர் அன்வர் அலி, அமைச்­சரின்  பிரத்­தி­யேக செய­லாளர் எம்.எச்.எம்.பாஹிம்,  அமைச்­சரின்  ஆலோ­சகர்  மொய்­னுதீன் மற்றும் தரீக்­காக்கள், மத்­ர­ஸாக்கள், மர்க்கஸ் என்­ப­வற்றின் பிர­தி­நி­திகள் கலந்து கொண்­டனர். 

இவ்­வா­றான விசா பெற்­றுக்­கொள்­வதில் கடைப்­பி­டிக்­கப்­படும் நடை­மு­றை­யினால் நீண்ட கால­தா­மதம் ஏற்­ப­டு­வ­தா­கவும்,  இதனைத் தடுக்க  நட­வ­டிக்கை  எடுக்­க­வேண்­டு­மெ­னவும் கலந்­து­ரை­யா­டலின் போது தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

விசா விண்­ணப்பக் கோரிக்கை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு கிடைத்­ததும்  திணக்­களம்  முஸ்லிம்  சம­ய­வி­வ­கார அமைச்­சுக்கு அனுப்பி வைக்கும். அமைச்சு ஊடாக  அந்த விண்­ணப்பம்  பாது­காப்பு  அமைச்­ச­ருக்கு அனுப்பி வைக்­கப்­படும். பாது­காப்பு அமைச்சு அதனைப் பரி­சீ­லனை செய்து மீண்டும் முஸ்லிம் சமய விவ­கார  அமைச்­சுக்கு அனுப்பி வைக்கும்.

இதன் பின்பு அமைச்சு  தேவை­யான  ஆவ­ணங்­க­ளுடன் குடி­வ­ரவு  குடி­ய­கல்வு  திணைக்­க­ளத்­துக்கு  அனுப்பி வைக்கும். இதுவே தற்­போ­துள்ள நடை­மு­றை­யாகும் என அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரி­வித்தார். இதனால்  விசா பெற்­றுக்­கொள்­வதில் நீண்­ட­கால தாமதம்  ஏற்­ப­டு­கி­றது.

இதனைத் தவிர்ப்­ப­தற்­காக முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு மேற்­கொள்ள வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித்து பாது­காப்பு அமைச்­சுடன் கலந்­து­ரை­யா­டி­யுள்ளேன்.

இதன்­படி  இதன் பின்பு அமைச்­சினால் விண்­ணப்­பங்கள் தேவை­யான ஆவ­ணங்­க­ளுடன் ஒரே தட­வையில் பாது­காப்பு அமைச்­சுக்கும், குடி வரவு – குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­துக்கும் அனுப்பி வைக்­கப்­படும் என்றார். 

மேலும் இந்­தியா போன்ற நாடு­க­ளி­லி­ருந்து, இலங்­கை­யி­லுள்ள  தர்ஹ­ாக்­களில் தங்­கி­யி­ருந்து  கடமை  புரி­வ­தற்­காக வருகை தரு­ப­வர்கள் தொடர்ச்­சி­யாக தங்­கி­யி­ருப்­ப­தற்கு வழங்­கப்­பட்டு வந்த Free Visa தற்­போது  நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த Free Visa  முறை­மையை    மீண்டும் அமுல்­ப­டுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­வ­தற்கும் நட­வ­டிக்­கைகள் எடுக்­க­வுள்ளேன் என்றார். 

-விடிவெள்ளி-

1 comment:

  1. Vமுதலில் தர்ஹா வழிபாடு என்னும் ஷிர்க்கை நிறுத்துங்கள் இவர்கள் இஸ்லாமிய கொள்கைகள் கொண்ட கூட்டம் அல்ல கூலிக்கு மாரடிக்கும் வயிற்றுப்புளப்பு கூட்டம்.அவர்களுக்கு விசாவை நிரந்தரமாக நிறுத்துங்கள்

    ReplyDelete

Powered by Blogger.