முஸ்லிம் குடும்பத்தினரின், வீட்டுக்குச் சென்ற பாப்பரசர்
இத்தாலியின் மிலன் நகருக்குச் சென்ற பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் தொழிலாளர் குடும்பம் மற்றும் முஸ்லிம் குடும்பமொன்றின் வீடுகளுக்கும் சென்றார்.
நேற்று முன்தினம் இத்தாலியின் மிலன் நகருக்கு பாப்பரசர் சென்றபோது அங்குள்ள 3 சிறிய குடியிருப்புகளிலுள்ள முஸ்லிம் குடும்பமொன்றை சந்தித்துள்ளார். இவர்கள் மொரோக்கோவிலிருந்து இத்தாலியில் குடியேறியுள்ளனர்.
அவர்கள் பாப்பரசருக்கு இனிப்பு, பேரீச்சம்பழம் மற்றும் பால் அடங்கிய சிற்றுண்டியையும் வழங்கியுள்ளார்கள். இந்த சந்திப்பினையடுத்து, இது உணர்ச்சி மிக்கதான தருணமாக இருந்தது எனவும் வீட்டுக்கு ஒரு நண்பர் வந்திருந்தது போல் இருந்தது எனவும் முஸ்ஸிம் குடும்பத்தின் தலைவர் அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வயதான இத்தாலிய தம்பதியினரையும் சந்தித்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அவர்களின் ஆரோக்கியம் குறித்தும் விசாரித்துள்ளார்.

Post a Comment