இஸ்லாமிய போதனைகளுக்கு வருபவர்களுக்கு, விசா வழங்கல் முறைகளில் திருத்தம் செய்யுங்கள்
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேசியா, சிரியா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து மத பிரசார நடவடிக்கைகளுக்காகவும், இஸ்லாமிய போதனைகளுக்காகவும் வருகை தருபவர்களுக்கு விசா வழங்குவதில் கையாளப்படும் முறைகளில் திருத்தங்களைச் செய்யுமாறு முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் அரசாங்கத்தைக் கோரவுள்ளார்.
விசா பெற்றுக்கொள்வதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வருகை தந்து இங்கு தங்கியிருக்கும் தரீக்கா தங்கள்மாருக்கு Free Visa வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளமை போன்ற காரணங்களையடுத்தே அமைச்சர் ஹலீம் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து மத பிரசார நடவடிக்கைகளுக்காகவும், மத்ரஸாக்களுக்கும், அரபுக்கல்லூரிகளுக்கும் இஸ்லாம் பாடத்தை போதிப்பதற்காகவும் வருகை தருபவர்களின் விசா தொடர்பில் ஏற்பட்டுள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும், கலந்துரையாடலொன்று நேற்றுக்காலை முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சில் அமைச்சர் எம்.எச்.எம் ஹலீம் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் அமைச்சின் மேலதிக செயலாளர் முஸ்லிம் சமய பண்பாட்டாலுவல்கள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் அன்வர் அலி, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.எச்.எம்.பாஹிம், அமைச்சரின் ஆலோசகர் மொய்னுதீன் மற்றும் தரீக்காக்கள், மத்ரஸாக்கள், மர்க்கஸ் என்பவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறான விசா பெற்றுக்கொள்வதில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையினால் நீண்ட காலதாமதம் ஏற்படுவதாகவும், இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.
விசா விண்ணப்பக் கோரிக்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு கிடைத்ததும் திணக்களம் முஸ்லிம் சமயவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கும். அமைச்சு ஊடாக அந்த விண்ணப்பம் பாதுகாப்பு அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும். பாதுகாப்பு அமைச்சு அதனைப் பரிசீலனை செய்து மீண்டும் முஸ்லிம் சமய விவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கும்.
இதன் பின்பு அமைச்சு தேவையான ஆவணங்களுடன் குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கும். இதுவே தற்போதுள்ள நடைமுறையாகும் என அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார். இதனால் விசா பெற்றுக்கொள்வதில் நீண்டகால தாமதம் ஏற்படுகிறது.
இதனைத் தவிர்ப்பதற்காக முஸ்லிம் சமய விவகார அமைச்சு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடியுள்ளேன்.
இதன்படி இதன் பின்பு அமைச்சினால் விண்ணப்பங்கள் தேவையான ஆவணங்களுடன் ஒரே தடவையில் பாதுகாப்பு அமைச்சுக்கும், குடி வரவு – குடியகல்வு திணைக்களத்துக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார்.
மேலும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து, இலங்கையிலுள்ள தர்ஹாக்களில் தங்கியிருந்து கடமை புரிவதற்காக வருகை தருபவர்கள் தொடர்ச்சியாக தங்கியிருப்பதற்கு வழங்கப்பட்டு வந்த Free Visa தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த Free Visa முறைமையை மீண்டும் அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளேன் என்றார்.
-விடிவெள்ளி-
Vமுதலில் தர்ஹா வழிபாடு என்னும் ஷிர்க்கை நிறுத்துங்கள் இவர்கள் இஸ்லாமிய கொள்கைகள் கொண்ட கூட்டம் அல்ல கூலிக்கு மாரடிக்கும் வயிற்றுப்புளப்பு கூட்டம்.அவர்களுக்கு விசாவை நிரந்தரமாக நிறுத்துங்கள்
ReplyDelete