Header Ads



ஜெனீவா கூட்டத்தொடர், ஹுசைனின் உரையுடன் இன்று ஆரம்பம் - இலங்கை பற்றிய அறிக்கையும் வருகிறது

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர்  இன்று திங்­கட்­கி­ழமை ஐ.நா.மனித உரிமை ஆணை­யாளர்  செய்ட் அல் ஹுசைனின் உரை­யுடன் ஆரம்­ப­மா­கின்­றது.  

எதிர்­வரும் மார்ச்  மாதம் 24 ஆம் திக­தி ­வரை நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத்  தொடரில் உலக நாடு­களின்  மனித உரிமை நிலை­மைகள் குறித்து  ஆரா­யப்­ப­ட­வு­டள்­ளது.  

அத்­துடன்  இலங்கை   தொடர்­பான   ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை  பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­துடன்   இலங்கை  தொடர்­பான   பிரே­ரணை  ஒன்றும் பிரிட்டன் உள்­ளிட்ட ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளினால்  முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. 

இன்று திங்­கட்­கி­ழமை    ஆரம்­ப­மா­க­வுள்ள முத­லா­வது    அமர்வில் ஐக்­கிய நாடு­களின் பொதுச்  செய­லாளர் நாயகம்  அன்­டோ­னியோ கட்ரஸ்   ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் உள்­ளிட்டோர்  உரை­யாற்­ற­வுள்­ளனர்.   

மேலும் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர எதிர்­வரும்  28 ஆம் திகதி ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில்  இலங்­கையின் சார்பில் உரை­யாற்­ற­வுள்ளார். 

இம்­முறை கூட்டத்  தொடர் இலங்­கைக்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக அமை­ய­வுள்­ளது. விசே­ட­மாக   கடந்த  2015 ஆம்  ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட  இலங்கை  தொடர்­பான ஜெனிவா  பிரே­ர­ணையை அர­சாங்கம் எவ்­வாறு  அமுல்­ப­டுத்­தி­யது என்­பது  தொடர்­பாக  ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் எழுத்­து­மூல அறிக்­கையை  எதிர்­வரும் 22 ஆம் திகதி   சமர்ப்­பிக்­க­வுள்ளார். 

அது­மட்­டு­மன்றி ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­களும்  சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின்  பிர­தி­நி­தி­களும்  இலங்கை  தொடர்­பாக  உரை­யாற்­ற­வுள்­ளனர். 

எதிர்­வரும் இரண்டாம் திக­தியும்    15 ஆம் திக­தியும் ஐ.நா. விசேட நிபு­ணர்­களின் இலங்கை  தொடர்­பான அறிக்­கைகள் குறித்த விவா­தமும்  23 ஆம் திகதி   இலங்கை  தொடர்­பான  பிரே­ரணை குறித்த விவா­தங்­களும்   நடை­பெ­ற­வுள்­ளன.  மேலும்  22 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை மீதான விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. 

சிறு­பான்மை மக்­களின் விட­யங்­களை ஆராயும்  ஐக்­கிய நாடுகள் விசேட  நிபுணர்  ரீட்டா ஐசாக் நாடி­யாவின் இலங்கை  தொடர்­பான அறிக்கை  ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்­பான விவாதம்  எதிர்­வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. 

இதன்­போது தனது இலங்கை  தொடர்­பான அறிக்­கையின் சுருக்­கத்தை  ஐ.நா. விசேட நிபுணர்  ரீட்டா ஐசாக்  மனித உரிமை பேர­வையில்  முன்­மொ­ழிவார்.  தொடர்ந்து உறுப்பு நாடுகள்  தமது நிலைப்­பா­டு­களை முன்­வைக்கும். 

இம்­முறை இலங்­கையின் சார்பில்  முன்­னேற்­றங்­களை வெ ளிப்­ப­டுத்த  18 மாத கால அக­வாசம் கோரப்­ப­ட­வுள்­ளது. அதா­வது பேர­வையில் நாளை உரை­யாற்­ற­வுள்ள   அமைச்சர் மங்­கள சம­ர­வீர    கடந்த  2015 ஆம்  ஆண்டு இலங்­கையில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தின் பின்னர்  அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் நல்­லி­ணக்க வேலைத்­திட்­டங்கள் மற்றும்   தேசிய ஒற்­று­மையை பலப்­ப­டுத்­துதல்  ஜன­நா­ய­கத்தை வலுப்­ப­டுத்­துதல் உள்­ளிட்­டவை  தொடர்பில் விளக்­க­ம­ளிக்­க­வுள்ளார்.  

இதே­வேளை  2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை  தொடர்­பான பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் கால அவ­கா­சத்தை வழங்கும் வகை­யி­லான  பிரே­ரணை ஒன்று  பிரிட்டன் உள்­ளிட்ட  ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளினால்  முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது.   

அதா­வது  இலங்­கைக்கு   நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூ­ற­லையும் முன்­னெ­டுக்க மேலும்  கால அவ­கா­சத்தை  வழங்கும் நோக்­கி­லேயே   இவ்­வாறு பிரே­ர­ணை­யொன்று முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த பிரே­ரணை  குறித்த வாக்­கெ­டுப்பு மார்ச் மாதம்  23 ஆம் திகதி நடை­பெறும். இலங்கை அதற்கு   இணை அனு­ச­ரணை வழங்­கினால்   ஒரு­வேளை வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­டாமல் கடந்த 2015 ஆம் ஆண்டில் நடை­பெற்­றதைப்  போன்று ஏக­ம­ன­தாக  பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­டலாம். 

இதேவேளை சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித கண்காணிப்பகம் என்பன  இம்முறை கூட்டத்  தொடரில் இலங்கை தொடர்பில்   பல யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. 

3 comments:

  1. அந்தா நிக்கிற யார்ரா தம்பி நீ கொஞ்சம் கிட்ட வாடா மன இவங்க என்னமோ சொல்றாங்கட தம்பி மனிச உருமையாம் அது என்னடா தம்பி நம்மட ஊரு செய்யான் காக்காட கடையில கிடக்குமாடா தம்பி அது என்ன சாமான் கொஞ்சம் சத்தமா செல்லு காது நல்லா கேக்குதில்ல,ஆ ஆ ஆ ஆ அதாடா தம்பி அப்ப இந்த ஆம்புள பொம்புள சின்ன புள்ளயோளல்லாம் சாவடிக்கிற என்ன உருமடா தங்கம்,அது செரி நீ ஆர்ர மகன்டா மன,,,,ஆஆஆ நீ இஸ்ராயீல்ர மூத்தவனா,,, செரி போ வாப்பா,,,

    ReplyDelete
  2. அந்தா நிக்கிற யார்ரா தம்பி நீ கொஞ்சம் கிட்ட வாடா மன இவங்க என்னமோ சொல்றாங்கட தம்பி மனிச உருமையாம் அது என்னடா தம்பி நம்மட ஊரு செய்யான் காக்காட கடையில கிடக்குமாடா தம்பி அது என்ன சாமான் கொஞ்சம் சத்தமா செல்லு காது நல்லா கேக்குதில்ல,ஆ ஆ ஆ ஆ அதாடா தம்பி அப்ப இந்த ஆம்புள பொம்புள சின்ன புள்ளயோளல்லாம் சாவடிக்கிற என்ன உருமடா தங்கம்,அது செரி நீ ஆர்ர மகன்டா மன,,,,ஆஆஆ நீ இஸ்ராயீல்ர மூத்தவனா,,, செரி போ வாப்பா,,,

    ReplyDelete
  3. this government only seems pass the time idly exactly as previous regime.


    Hope is a good breakfast but a bad supper.

    ReplyDelete

Powered by Blogger.