ஜெனீவா கூட்டத்தொடர், ஹுசைனின் உரையுடன் இன்று ஆரம்பம் - இலங்கை பற்றிய அறிக்கையும் வருகிறது
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனின் உரையுடன் ஆரம்பமாகின்றது.
எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படவுடள்ளது.
அத்துடன் இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினால் முன்வைக்கப்படவுள்ளது.
இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள முதலாவது அமர்வில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்ரஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர்.
மேலும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் 28 ஆம் திகதி ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் சார்பில் உரையாற்றவுள்ளார்.
இம்முறை கூட்டத் தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாக அமையவுள்ளது. விசேடமாக கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான ஜெனிவா பிரேரணையை அரசாங்கம் எவ்வாறு அமுல்படுத்தியது என்பது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் எழுத்துமூல அறிக்கையை எதிர்வரும் 22 ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளார்.
அதுமட்டுமன்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இலங்கை தொடர்பாக உரையாற்றவுள்ளனர்.
எதிர்வரும் இரண்டாம் திகதியும் 15 ஆம் திகதியும் ஐ.நா. விசேட நிபுணர்களின் இலங்கை தொடர்பான அறிக்கைகள் குறித்த விவாதமும் 23 ஆம் திகதி இலங்கை தொடர்பான பிரேரணை குறித்த விவாதங்களும் நடைபெறவுள்ளன. மேலும் 22 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
சிறுபான்மை மக்களின் விடயங்களை ஆராயும் ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் நாடியாவின் இலங்கை தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விவாதம் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதன்போது தனது இலங்கை தொடர்பான அறிக்கையின் சுருக்கத்தை ஐ.நா. விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் மனித உரிமை பேரவையில் முன்மொழிவார். தொடர்ந்து உறுப்பு நாடுகள் தமது நிலைப்பாடுகளை முன்வைக்கும்.
இம்முறை இலங்கையின் சார்பில் முன்னேற்றங்களை வெ ளிப்படுத்த 18 மாத கால அகவாசம் கோரப்படவுள்ளது. அதாவது பேரவையில் நாளை உரையாற்றவுள்ள அமைச்சர் மங்கள சமரவீர கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க வேலைத்திட்டங்கள் மற்றும் தேசிய ஒற்றுமையை பலப்படுத்துதல் ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார்.
இதேவேளை 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அமுல்படுத்துவதற்கு மேலும் கால அவகாசத்தை வழங்கும் வகையிலான பிரேரணை ஒன்று பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினால் முன்வைக்கப்படவுள்ளது.
அதாவது இலங்கைக்கு நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் முன்னெடுக்க மேலும் கால அவகாசத்தை வழங்கும் நோக்கிலேயே இவ்வாறு பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது. இந்த பிரேரணை குறித்த வாக்கெடுப்பு மார்ச் மாதம் 23 ஆம் திகதி நடைபெறும். இலங்கை அதற்கு இணை அனுசரணை வழங்கினால் ஒருவேளை வாக்கெடுப்புக்கு விடப்படாமல் கடந்த 2015 ஆம் ஆண்டில் நடைபெற்றதைப் போன்று ஏகமனதாக பிரேரணை நிறைவேற்றப்படலாம்.
இதேவேளை சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித கண்காணிப்பகம் என்பன இம்முறை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் பல யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தா நிக்கிற யார்ரா தம்பி நீ கொஞ்சம் கிட்ட வாடா மன இவங்க என்னமோ சொல்றாங்கட தம்பி மனிச உருமையாம் அது என்னடா தம்பி நம்மட ஊரு செய்யான் காக்காட கடையில கிடக்குமாடா தம்பி அது என்ன சாமான் கொஞ்சம் சத்தமா செல்லு காது நல்லா கேக்குதில்ல,ஆ ஆ ஆ ஆ அதாடா தம்பி அப்ப இந்த ஆம்புள பொம்புள சின்ன புள்ளயோளல்லாம் சாவடிக்கிற என்ன உருமடா தங்கம்,அது செரி நீ ஆர்ர மகன்டா மன,,,,ஆஆஆ நீ இஸ்ராயீல்ர மூத்தவனா,,, செரி போ வாப்பா,,,
ReplyDeleteஅந்தா நிக்கிற யார்ரா தம்பி நீ கொஞ்சம் கிட்ட வாடா மன இவங்க என்னமோ சொல்றாங்கட தம்பி மனிச உருமையாம் அது என்னடா தம்பி நம்மட ஊரு செய்யான் காக்காட கடையில கிடக்குமாடா தம்பி அது என்ன சாமான் கொஞ்சம் சத்தமா செல்லு காது நல்லா கேக்குதில்ல,ஆ ஆ ஆ ஆ அதாடா தம்பி அப்ப இந்த ஆம்புள பொம்புள சின்ன புள்ளயோளல்லாம் சாவடிக்கிற என்ன உருமடா தங்கம்,அது செரி நீ ஆர்ர மகன்டா மன,,,,ஆஆஆ நீ இஸ்ராயீல்ர மூத்தவனா,,, செரி போ வாப்பா,,,
ReplyDeletethis government only seems pass the time idly exactly as previous regime.
ReplyDeleteHope is a good breakfast but a bad supper.