Header Ads



சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல், 6 பேர் பலி - களுத்துறையில் பரபரப்பு

களுத்துறை பகுதியில் சற்று முன் சிறைச்சாலை பஸ் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோகத்தினால் ஐந்து கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

பதாள குழு முக்கிய உறுப்பினர் சமன் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

மேலும், 4 பேர் காயத்திற்கு மத்தியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பாதாளக் குழு உறுப்பினர்களுடன் சென்ற சிறைச்சாலை பஸ் வண்டி மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இனந்தெரியாத குழுவினராலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

No comments

Powered by Blogger.