பௌத்த கொள்கைகளை பாதுகாக்க, அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் - ஜனாதிபதி
பௌத்த கொள்கைகளை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி பெல்மடுல்ல கனேகம அரமனபொல ரஜமஹா விஹாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எந்த வகையிலான விமர்சனங்கள் வெளியிடப்பட்டாலும் பௌத்த கொள்கைகளை பாதுகாத்துக் கொள்ள எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
மனிதாபிமானம், மனித நேயம் போன்றன மட்டுமன்றி நல்லொழுக்கமும் அடக்கி ஒடுக்கப்பட்டு போட்டி நிலை கொண்ட சமூகக் கட்டமைப்பு உருவாகியுள்ளது.
இந்த சமூக அவலத்தை மாற்றியமைக்கக்கூடிய ஒரே வழி மதக் கொள்கைகளை மேம்படுத்துவதாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

யார் கலவு செய்தார்கள். சிறுபான்மைக்கு மரியாதை செய்தால் இயற்கையாகவே பாதுகாப்பு கிடைக்கும்
ReplyDelete