Header Ads



அக்கரைப்பற்றில் யானை தாக்கி, அப்துல் கபூர் உயிரிழப்பு

எஸ்.ரி.ஜமால்டீன் 

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று அம்பாரை வீதி 4ஆம் கட்டையில் இன்று (20.04.2016) அதிகாலை  யானையின் தாக்குதலுக்குஉள்ளாகி விவசாயி; கமர்டீன் என அழைக்கப்படும்  ஆதம் லெவ்வை அப்துல் கபூர் (66 வயது) என்பவர் பரிதாபகரமாக உயிர் இழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர் 

உயிர் இழந்தவர்  ஐந்து பிள்ளைகளின் தந்தையான அட்டாளைச்சேனை 9ஆம் பிரிவுமீனோடைக்கட்டு சஹீட் ஹாஜியார் வீதியைச் சேர்நதவர் எனவும் பொலிஸார் மேலும்  தெரிவித்தனர். 

உயிரிழந்தவரின் ஜனாஸா (சடலம்) இன்று காலை அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையின் சேர்க்கப்பட்டு விசாரணையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாகமேலும் தெரியவருவதாகவது,

உயிரிழந்தநபர் இன்று -20- அதிகாலை 3.30 மணியளவில் தனதுவீட்டிலிருந்து துவிச்சக்கர வண்டியில் அக்கரைப்பற்று இலுக்குச்சேனை களவெட்டியா வயல் பிரதேசத்திற்குவிவசாய நடவடிக்கைகளுக்காக சென்று கொண்டிருக்கும் போது அக்கரைப்பற்று அம்பாரை பிரதான வீதி 4ஆம் கட்டையில் யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார் அதன் போது வீதியால் வந்தவர்கள் தாக்குதலுக்கு உள்ளானவரின் கைத்தொலைபேசியை எடுத்து அதில் இருந்த வீட்டு இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி நடந்தசம்பவத்தை கூறியுள்ளனர்.

அதனையடுத்து உறவினர்கள் அங்கு சென்று தாக்குதலுக்கு உள்ளானவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது வழியில் உயிரிழந்துள்ளார்.

இது சம்பவம் தொடர்பான   விசாரணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.