ஆயுதங்கள் தாங்கிய குழு, சிறுவனை பணயக்கைதியாக்கி தங்கமும், பணமும் கொள்ளை
17 வயது சிறுவனை பணயக்கைதியாகப் பிடித்த, ஆயுதங்கள் தாங்கிய இனந்தெரியாத குழுவொன்று, வீட்டிலிருந்த தங்கம் மற்றும் பணத்தை களவாடிச்சென்றுள்ள சம்பவமொன்று மாரவில, வேரஹேன பிரதேசத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை -19-இரவு இடம்பெற்றுள்ளது.
பணயக்கைதியாக பிடித்துச்செல்லப்பட்ட அந்த சிறுவன், கொச்சிக்கடைப் பிரதேசத்தில் வைத்து கைவிடப்பட்டுள்ளான் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment