Header Ads



இது சரியான தண்டனையா..? (படம் இணைப்பு)


பஞ்சாப் மாநிலத்தில் (2014 இல்) 7 மாத பெண் குழந்தையாக இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரின் கையை பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை வெட்டி எறிந்துவிட்டார். 

பாதிண்டா மாவட்டத்தின் கோட்லி அப்லு கிராமத்தை சேர்ந்த பார்மிந்தர் சிங் என்ற வாலிபர் 7 மாத வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. செவ்வாய் கிழமை விசாரணைக்காக சிறுமியின் தந்தை பம்மா சிங் மற்றும் குற்றவாளி பார்மிந்தர் சிங் பாதிண்டா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் சமரசம் செய்துக் கொள்ளலாம் என்று பம்மா சிங், பார்மிந்தர் சிங்கிடம் கேட்டுக் கொண்டு உள்ளார். பின்னர் பார்மிந்தர் சிங்கை மோட்டார் சைக்களில் அழைத்து சென்று உள்ளார். 

ஜுகும்பா கிராமத்தை அடைந்ததும் பார்மிந்தர் சிங்கை கீழே இறங்க கூறிய பம்மா சிங், அவரை மரத்தில் கட்டிஉள்ளார். தொடர்ந்து கூர்மையான ஆயுதத்தை எடுத்து பார்மிந்தர் சிங்கின் இரண்டு கைகளையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் பார்மிந்தர் சிங்கை மீட்டு பாதிண்டா பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பார்மிந்தர் சிங்கின் தலை மற்றும் உடல் பகுதியிலும் காயம் உள்ளது. அவருக்கு மருத்துவமனையில் அபாய கட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பம்மா சிங்கிற்கு எதிராக போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தலைமறைவாக இருக்கும் பம்மா சிங்கை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5 comments:

  1. This is not enough for the person....
    Ohhhh 7-month child...? what a animal he is...
    The court must give him death penalty

    ReplyDelete
  2. இது சரியான தண்டனையா என்கின்ற கேள்விக்கே இடமில்லை. தண்டனைகளை சட்ட்டம்தான் தீர்மானிக்க வேண்டும்.

    அது சரி, சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த வழக்கில், சமரசம் செய்ய நீதிமன்றம் எப்படி அனுமதிக்க முடியும்? மிக முக்கியமாக விடை காணப்பட வேண்டிய கேள்வி அது.

    ReplyDelete
  3. நீதின்றத்துக்கு ஒரு விபஸ்தையே கிடையாதா?

    ReplyDelete
  4. எந்த நாட்டிலும் நீதி மன்றங்கள் இந்த மாதிரி விசயங்களுக்கு சமரசம் செய்வது இல்லை .
    அவன் பிணையில் விடுவிக்கப் பட்டிருக்கலாம் or ஊர் பஞ்சாயத்தில் சமரசம் ஆகி இருக்கலாம்.
    Jaffnamuslim please verify the news before publish.

    ReplyDelete
  5. Cort good judgement not giving people take action same time this good but goverment think criminal case how to judgment.

    ReplyDelete

Powered by Blogger.