Header Ads



ஜனாதிபதி மைத்திரியின் சகோதரருக்கு, ஆக்ரோசமான எச்சரிக்கை கடிதம் அனுப்பிவைப்பு

டெலிகொம் மற்றும் மொபிடெல் நிறுவனங்களின் தலைவராக செயற்படும் குமாரசிங்க சிறிசேன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உடன்பிறந்த சகோதரர் ஆவார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற இரண்டாவது நாளிலேயே இவர் டெலிகொம் மற்றும் மொபிடெல் நிறுவனங்களின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் இவர் பதவியேற்றது முதல் டெலிகொம் மற்றும் மொபிடெல் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளவில்லை என்று தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

அத்துடன் அவரது முறையற்ற வர்த்தகத் தொடர்புகள் காரணமாக குறித்த நிறுவனங்கள் பாரிய இழப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தொழில் அறம், நிறுவனங்களின் வளர்ச்சி என்பவற்றுக்குப் புறம்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் குமாரசிங்க சிறிசேன தனது தலைவர் பதவியை ராஜினாமாச் செய்ய வேண்டும் என்று நேரடியாக தொழிற்சங்கங்கள் ஆக்ரோசமான கடிதமொன்றின் ஊடாக எச்சரிக்கை வேண்டுகோள் விடுத்துள்ளன.

அரசாங்க நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போர்க்கொடி தூக்குவது வழமையாக இருந்த போதிலும், நேரடியாக அவரை பதவி விலகுமாறு கோரி கடிதமொன்றைக் கையளித்துள்ளமை இதுவே முதல்தடவையாகும்.

No comments

Powered by Blogger.