Header Ads



பௌத்த தரப்புடன் பேச்சுக்கு தயார் - பொதுபலசேனாவின் அழைப்புக்கு, முஸ்லிம்கள் பச்சைக்கொடி

-ARA.Fareel + விடிவெள்ளி-

இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கும், பெளத்­தர்­க­ளுக்­கு­மி­டையில்  நிலவும்  முரண்­பா­டு­க­ளையும்  சந்­தே­கங்­க­ளையும் பேச்­சு­வார்த்­தைகள் மூலம்  தீர்த்துக் கொள்­வ­தற்கு பொது­ப­ல­சேனா அமைப்பு  விடுத்­துள்ள  அழைப்­பினை முஸ்லிம்  அர­சியல் கட்­சி­களும், அர­சியல் தலை­வர்­களும் வர­வேற்­றுள்­ளனர். இது மகிழ்ச்­சிக்­கு­ரிய விடயம் எனவும் தெரி­வித்­துள்­ளனர்.

பொது­பல சேனாவின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலன்த விதா­ன­கே­யுடன் அகில இலங்கை ஐம்­இய்­யத்துல் உல­மா­சபை கடந்த  காலங்­களில் ஹலால் விவ­காரம்  மற்றும் முஸ்­லிம்­களின்  கலா­சார உடை தொடர்­பாக பேச்சு வார்த்­தைகள்  நடத்­தி­யுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளது. 

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை  பொது­ப­ல­சேனா அமைப்பு கொழும்பில் நடாத்­திய  ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில்  அதன் நிறை­வேற்றுப் பணிப்­பாளர்  கலா­நிதி  டிலன்த விதா­னகே இலங்­கையில் முஸ்லிம்  அடிப்­ப­டை­வா­தத்தை   அழித்து முஸ்­லிம்­க­ளுக்கும் பெளத்­தர்­க­ளுக்­கு­மி­டையில்  நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும்,  இதற்கு முஸ்லிம்  அர­சியல் தலை­வர்­க­ளு­டனும்,  உல­மாக்­க­ளு­டனும்  பேச்­சு­வார்த்தை  நடாத்த தயா­ரா­க­வுள்­ள­தா­கவும்  குறிப்­பிட்­டி­ருந்தார்.  இது­தொ­டர்பில்  முஸ்லிம்  அர­சியல் கட்­சிகள், அர­சியல் தலை­வர்கள்,  மற்றும் உலமா சபையை ‘விடி­வெள்ளி’ தொடர்பு கொண்டு  வின­வி­ய­போதே மேற்­கு­றிப்­பிட்ட கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்­டன. 

அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்

முஸ்லிம் சமய விவ­கார மற்றும்  தபால்­துறை  அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பொது­ப­ல­சே­னாவின் அறை­கூவல்  தொடர்பில்   கருத்து தெரி­விக்­கையில், முஸ்­லிம்கள் இந்­நாட்டில் அனைத்து சமூ­கங்­க­ளுடன் நல்­லி­ணக்­கத்­து­டனே வாழ விரும்­பு­கி­றார்கள். வாழ்ந்தும்  வரு­கி­றார்கள். முஸ்­லிம்­களை பயங்­க­ர­வா­திகள் என்று முத்­திரை குத்­து­வது  தவ­றா­ன­தாகும்.  சிங்­க­ள­வர்­க­ளுக்கும், எமக்­கு­மி­டையில்  எந்தப் பிரச்­சி­னை­யு­மில்லை.  எம்­மீது ஏதும்  சந்­தே­கங்கள்  இருந்தால்  பொது­ப­ல­சேனா  அமைப்பு எம்­முடன்  கலந்­து­ரை­யாடி அவற்றைத் தீர்த்துக் கொள்ள முடியும்.  பொது­ப­ல­சேனா  இவ்­வா­றான ஒரு நல்­லி­ணக்க பேச்­சு­வார்த்­தைக்கு  அழைத்­தி­ருக்­கின்­றமை மகிழ்ச்­சி­ய­ளிக்­கி­றது என்றார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ்  பொதுச் செய­லாளர்  ஹசன் அலி

ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் எம்.ரீ. ஹசன்  அலி இது தொடர்பில்  கருத்து  வெளி­யி­டு­கையில்  முஸ்­லிம்­க­ளுக்கும், பெரும்­பான்மை சமூ­கத்­துக்கும் இடை­யி­லான பிரச்­சி­னைகள், முரண்­பா­டுகள் மாத்­தி­ர­மல்ல எவ்­வ­கை­யான  சந்­தே­கங்­க­ளையும் முரண்­பா­டு­க­ளையும் பேச்சு வார்த்­தைகள் மூலம் நிச்­சயம் தீர்த்துக் கொள்­ளலாம்.  நேர­டி­யான  பேச்­சு­வார்த்­தைகள் இத­ய­சுத்­தி­யுடன் நடாத்­தப்­ப­ட­வேண்டும்.  பொது­ப­ல­சேனா அமைப்பு மாத்­தி­ர­மல்ல எந்த அமைப்­பென்­றாலும் முஸ்லிம் சமூகம் தொடர்­பாக தங்­க­ளுக்குள் நிலவும் சந்­தே­கங்­களை பேச்­சு­வார்த்­தைகள்  மூலம் நிவர்த்தி செய்து கொள்­ளலாம்.  பேச்சு வார்த்­தை­க­ளுக்கு முஸ்லிம் காங்­கிரஸ்  தயா­ரா­கவே இருக்­கி­றது என்றார். 

அ.இ.ம.காங்­கிரஸ் செய­லாளர் எஸ்.சுபைர்தீன்

பொது­ப­ல­சேனா அமைப்பு நீண்ட கால­மாக முஸ்­லிம்கள் மீது சந்­தேகம் கொண்­டுள்­ளது.  முஸ்­லிம்கள்  அடிப்­ப­டை­வா­திகள், பயங்­க­ர­வா­திகள் என்று முத்­திரை குத்­தி­யுள்­ளது. இந்­நி­லையில்  அவ்­வ­மைப்பு பேச்சு வார்த்­தைகள் மூலம் தனது சந்­தே­கங்­களைத்  தீர்க்க  திட்­ட­மிட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது. மகிழ்ச்­சிக்­கு­ரி­யது. முஸ்­லிம்கள்  தீவி­ர­வா­தி­க­ளல்ல, இஸ்லாம் தீவி­ர­வா­தத்தை எதிர்க்கும் ஒரு நடு­நி­லை­யான மார்க்­க­மாகும். ஆனால்  இஸ்­லா­மிய  அடிப்­ப­டை­வா­தத்தை விட்டுக் கொடுக்க முடி­யாது. பொது­ப­ல­சேனா  ‘அடிப்­ப­டை­வாதம்’ என்ற பதத்தின்  அர்த்­தத்தை  தவ­றாகப் புரிந்து கொண்­டுள்­ளது.  இஸ்லாம் மதத்தின் கோட்­பா­டு­களே அடிப்­ப­டை­வாதம். இதேபோல் பெளத்­த­மத  கோட்­பா­டுகள் பெளத்த அடிப்­ப­டை­வா­த­மாகும். எல்லா மதங்­க­ளிலும் மத­ரீ­தி­யான அடிப்­ப­டை­வாதம் இருக்­கின்­றன. இந்த மத கோட்­பா­டு­களின் கீழேயே ஷரீஆ உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. அ.இ.ம. காங்­கிரஸ் பொது­ப­ல­சே­னா­வு­ட­னான பேச்­சு­வார்த்­தையை வர­வேற்­கி­றது. பேச்­சு­வார்த்­தையின்  போது எமது சமயக் கோட்­பா­டு­களின்  நியா­யங்­க­ளையும்  நேர்மைத் தன்­மையும் பற்றி  எம்மால் விளக்­க­ம­ளிக்க முடியும் என்றார். 

அ.இ.ஜ.உ.சபை பொதுச்­செ­ய­லாளர் அஷ்ஷெய்க்  எம்.எம்.ஏ.முபாரக் 

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர்  எம்.எம்.ஏ.முபாரக்  இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்ல், உலமா சபையின் பிர­தி­நி­திகள்  மாதந்­தோறும் நடை­பெறும் சர்­வ­மத தலை­வர்­களின்  கூட்­டங்­களில் கலந்து கொண்டு மதங்­க­ளுக்­கி­டையில்  ஏதும் சந்­தே­கங்கள், பிரச்­சி­னைகள் இருந்தால் தீர்த்­துக்­கொள்­கி­றார்கள். பொது­ப­ல­சேனா அமைப்பு முஸ்லிம் சமூகம் தொடர்பில் சந்­தே­கங்கள், பிரச்­சி­னைகள் இருந்தால்  உலமா சபையைத் தொடர்பு கொண்டு அல்­லது  நேரில் வந்து தெளி­வு­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும்.  முஸ்­லிம்கள்  அடிப்­ப­டை­வா­தி­க­ளல்லர். அவர்கள் இஸ்­லா­மிய கோட்­பா­டு­களைக் கடைப்­பி­டிப்­ப­வர்கள். இதனால்  அவர்­களை அடிப்­ப­டை­வா­தி­க­ளாக  சித்­தி­ரிக்க முடி­யாது.  உலமா சபை பொது­ப­ல­சேனா அமைப்­புடன் கடந்த காலங்­களில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளது.  அவ்­வ­மைப்பு தற்­போது நல்­லி­ணக்கம்  தொடர்பில் முயற்­சிக்­கின்­றமை மகிழ்ச்­சியைத் தரு­கி­றது என்றார். 

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் 

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து வெளி­யி­டு­கையில் பொது­ப­ல­சேனா முஸ்லிம்  அர­சியல் தலை­வர்­க­ளு­டனும், உல­மாக்­க­ளு­டனும் பேச்சு வார்த்தை நடத்­தலாம். ஆனால் அதற்கு முன்பு முஸ்­லிம்கள் தொடர்பில்  அவர்­க­ளுக்கு இருக்கும் பிரச்சினைகளை விளக்க வேண்டும். இதைவிடுத்து   முஸ்லிம்கள், பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள் என்று பிரசாரம் செய்ய முடியாது. முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக இருந்தால் அதைப்பற்றி உளவுப் பிரிவினரிடம் முறையிட்டு  சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்களவர்களில் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என்று நாம் கூறவில்லை. 

பொதுபலசேனா அமைப்பு  தவறான கருத்துக்களை கைவிட்டு மூவின சமூகங்களும் நல்லிணக்கத் துடன் வாழ்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.  அதற்கான கதவுகளைத் திறக்க வேண்டும். தவறான கருத்துக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காது இதய சுத்தியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெக்க வேண்டும் என்றார். 

6 comments:

  1. Very good initiative and go ahead and do it.
    Agents of Salafi it would be another bida to do it. Is not that ?
    They feel that all groups are going hand in hand with BBS to leave them alone

    ReplyDelete
  2. Mujibur Rahman is right . Talks ? Yes but on condition.
    " come clean with open mind ." What have they got to
    talk with us ? There are laws to guarantee rights to
    all communities and there are law enforcement authorities
    to supervise everything is smooth and running . We don't
    even need to talk with organizations like BBS because
    we have not raised any issue with Buddhist clergy . Our
    laws are dealing with everyday situations with all our
    citizens and when race and religious discrimination
    happens , we take it up with relevant authorities . If
    BBS was created to function under the laws of the land
    then it is the BBS that has to be conscious of its
    activities . Firstly let them win Buddhist approval that
    they are accepted to represent Buddhists of the country.
    BBS won't need Muslims for this . There's plenty that
    BBS can do to serve their Buddhist devotees . They don't
    have to waste their time on Muslims .

    ReplyDelete
  3. Beyond politics and law and order. Speak to them as human beings

    ReplyDelete
  4. bbs.adipadaie vadigal muslim matrum adipadya vitaal muslim illa ithuku vayapolanthu kittu acju rediyahom

    ReplyDelete
  5. As human beings they can talk with our Muslims , just
    anybody . Why politicians and Muslim clergy ? Talking
    with them is a serious issue . It will mean accepting
    them as an influential body that we need to live with.
    Any step with them should be with utmost care . They
    had been behind the hatred campaign against Muslims
    very publicly . We Muslims have no issues to settle
    with them . They threatened Muslims to strengthen the
    hands of Rajapakse power base. Muslims and Tamils took
    the risk of defeating that goal . Any talks with BBS
    could undermine this hard earned achievements. They
    are not an organization to be reckoned with . There's
    no such thing as " Beyond politics and law and order."
    Speaking to them as human beings can be done as
    private individuals .

    ReplyDelete
  6. இது என்ன வேடிக்கை. பொது பலசெனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முஸ்லிம்களின் எத்தனை சேனாக்கள் ? ஒரு நாளும் எம் முஸ்லிம்கள் தலைவர்கள் ஒற்றுமை எனும் கையிற்றை பற்றிப் பிடிக்கவில்லை. இறை வசனத்திற்கு மாறு செய்கிறிர்கள். வெவேறு கூட்டமாக செல்கிரிர்களே ? தயவு செய்து ஒரு கூட்டமாக ஒற்றுமையுடன் செல்லுங்கள். எல்லாம் வல்ல அர்ரஹ்மான் கிருபையினால் இன்ஷா அல்லாஹ் நல்லதே நடக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.