பௌத்த தரப்புடன் பேச்சுக்கு தயார் - பொதுபலசேனாவின் அழைப்புக்கு, முஸ்லிம்கள் பச்சைக்கொடி
-ARA.Fareel + விடிவெள்ளி-
இலங்கையில் முஸ்லிம்களுக்கும், பெளத்தர்களுக்குமிடையில் நிலவும் முரண்பாடுகளையும் சந்தேகங்களையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்வதற்கு பொதுபலசேனா அமைப்பு விடுத்துள்ள அழைப்பினை முஸ்லிம் அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். இது மகிழ்ச்சிக்குரிய விடயம் எனவும் தெரிவித்துள்ளனர்.
பொதுபல சேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலன்த விதானகேயுடன் அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமாசபை கடந்த காலங்களில் ஹலால் விவகாரம் மற்றும் முஸ்லிம்களின் கலாசார உடை தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை பொதுபலசேனா அமைப்பு கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலன்த விதானகே இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதத்தை அழித்து முஸ்லிம்களுக்கும் பெளத்தர்களுக்குமிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்களுடனும், உலமாக்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்த தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பில் முஸ்லிம் அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், மற்றும் உலமா சபையை ‘விடிவெள்ளி’ தொடர்பு கொண்டு வினவியபோதே மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்
முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பொதுபலசேனாவின் அறைகூவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், முஸ்லிம்கள் இந்நாட்டில் அனைத்து சமூகங்களுடன் நல்லிணக்கத்துடனே வாழ விரும்புகிறார்கள். வாழ்ந்தும் வருகிறார்கள். முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவது தவறானதாகும். சிங்களவர்களுக்கும், எமக்குமிடையில் எந்தப் பிரச்சினையுமில்லை. எம்மீது ஏதும் சந்தேகங்கள் இருந்தால் பொதுபலசேனா அமைப்பு எம்முடன் கலந்துரையாடி அவற்றைத் தீர்த்துக் கொள்ள முடியும். பொதுபலசேனா இவ்வாறான ஒரு நல்லிணக்க பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கின்றமை மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹசன் அலி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரீ. ஹசன் அலி இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில் முஸ்லிம்களுக்கும், பெரும்பான்மை சமூகத்துக்கும் இடையிலான பிரச்சினைகள், முரண்பாடுகள் மாத்திரமல்ல எவ்வகையான சந்தேகங்களையும் முரண்பாடுகளையும் பேச்சு வார்த்தைகள் மூலம் நிச்சயம் தீர்த்துக் கொள்ளலாம். நேரடியான பேச்சுவார்த்தைகள் இதயசுத்தியுடன் நடாத்தப்படவேண்டும். பொதுபலசேனா அமைப்பு மாத்திரமல்ல எந்த அமைப்பென்றாலும் முஸ்லிம் சமூகம் தொடர்பாக தங்களுக்குள் நிலவும் சந்தேகங்களை பேச்சுவார்த்தைகள் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம். பேச்சு வார்த்தைகளுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவே இருக்கிறது என்றார்.
அ.இ.ம.காங்கிரஸ் செயலாளர் எஸ்.சுபைர்தீன்
பொதுபலசேனா அமைப்பு நீண்ட காலமாக முஸ்லிம்கள் மீது சந்தேகம் கொண்டுள்ளது. முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியுள்ளது. இந்நிலையில் அவ்வமைப்பு பேச்சு வார்த்தைகள் மூலம் தனது சந்தேகங்களைத் தீர்க்க திட்டமிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. மகிழ்ச்சிக்குரியது. முஸ்லிம்கள் தீவிரவாதிகளல்ல, இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் ஒரு நடுநிலையான மார்க்கமாகும். ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை விட்டுக் கொடுக்க முடியாது. பொதுபலசேனா ‘அடிப்படைவாதம்’ என்ற பதத்தின் அர்த்தத்தை தவறாகப் புரிந்து கொண்டுள்ளது. இஸ்லாம் மதத்தின் கோட்பாடுகளே அடிப்படைவாதம். இதேபோல் பெளத்தமத கோட்பாடுகள் பெளத்த அடிப்படைவாதமாகும். எல்லா மதங்களிலும் மதரீதியான அடிப்படைவாதம் இருக்கின்றன. இந்த மத கோட்பாடுகளின் கீழேயே ஷரீஆ உள்ளடக்கப்பட்டுள்ளது. அ.இ.ம. காங்கிரஸ் பொதுபலசேனாவுடனான பேச்சுவார்த்தையை வரவேற்கிறது. பேச்சுவார்த்தையின் போது எமது சமயக் கோட்பாடுகளின் நியாயங்களையும் நேர்மைத் தன்மையும் பற்றி எம்மால் விளக்கமளிக்க முடியும் என்றார்.
அ.இ.ஜ.உ.சபை பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் எம்.எம்.ஏ.முபாரக் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்ல், உலமா சபையின் பிரதிநிதிகள் மாதந்தோறும் நடைபெறும் சர்வமத தலைவர்களின் கூட்டங்களில் கலந்து கொண்டு மதங்களுக்கிடையில் ஏதும் சந்தேகங்கள், பிரச்சினைகள் இருந்தால் தீர்த்துக்கொள்கிறார்கள். பொதுபலசேனா அமைப்பு முஸ்லிம் சமூகம் தொடர்பில் சந்தேகங்கள், பிரச்சினைகள் இருந்தால் உலமா சபையைத் தொடர்பு கொண்டு அல்லது நேரில் வந்து தெளிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். முஸ்லிம்கள் அடிப்படைவாதிகளல்லர். அவர்கள் இஸ்லாமிய கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பவர்கள். இதனால் அவர்களை அடிப்படைவாதிகளாக சித்திரிக்க முடியாது. உலமா சபை பொதுபலசேனா அமைப்புடன் கடந்த காலங்களில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அவ்வமைப்பு தற்போது நல்லிணக்கம் தொடர்பில் முயற்சிக்கின்றமை மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து வெளியிடுகையில் பொதுபலசேனா முஸ்லிம் அரசியல் தலைவர்களுடனும், உலமாக்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தலாம். ஆனால் அதற்கு முன்பு முஸ்லிம்கள் தொடர்பில் அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை விளக்க வேண்டும். இதைவிடுத்து முஸ்லிம்கள், பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள் என்று பிரசாரம் செய்ய முடியாது. முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக இருந்தால் அதைப்பற்றி உளவுப் பிரிவினரிடம் முறையிட்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்களவர்களில் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என்று நாம் கூறவில்லை.
பொதுபலசேனா அமைப்பு தவறான கருத்துக்களை கைவிட்டு மூவின சமூகங்களும் நல்லிணக்கத் துடன் வாழ்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அதற்கான கதவுகளைத் திறக்க வேண்டும். தவறான கருத்துக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காது இதய சுத்தியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெக்க வேண்டும் என்றார்.

Very good initiative and go ahead and do it.
ReplyDeleteAgents of Salafi it would be another bida to do it. Is not that ?
They feel that all groups are going hand in hand with BBS to leave them alone
Mujibur Rahman is right . Talks ? Yes but on condition.
ReplyDelete" come clean with open mind ." What have they got to
talk with us ? There are laws to guarantee rights to
all communities and there are law enforcement authorities
to supervise everything is smooth and running . We don't
even need to talk with organizations like BBS because
we have not raised any issue with Buddhist clergy . Our
laws are dealing with everyday situations with all our
citizens and when race and religious discrimination
happens , we take it up with relevant authorities . If
BBS was created to function under the laws of the land
then it is the BBS that has to be conscious of its
activities . Firstly let them win Buddhist approval that
they are accepted to represent Buddhists of the country.
BBS won't need Muslims for this . There's plenty that
BBS can do to serve their Buddhist devotees . They don't
have to waste their time on Muslims .
Beyond politics and law and order. Speak to them as human beings
ReplyDeletebbs.adipadaie vadigal muslim matrum adipadya vitaal muslim illa ithuku vayapolanthu kittu acju rediyahom
ReplyDeleteAs human beings they can talk with our Muslims , just
ReplyDeleteanybody . Why politicians and Muslim clergy ? Talking
with them is a serious issue . It will mean accepting
them as an influential body that we need to live with.
Any step with them should be with utmost care . They
had been behind the hatred campaign against Muslims
very publicly . We Muslims have no issues to settle
with them . They threatened Muslims to strengthen the
hands of Rajapakse power base. Muslims and Tamils took
the risk of defeating that goal . Any talks with BBS
could undermine this hard earned achievements. They
are not an organization to be reckoned with . There's
no such thing as " Beyond politics and law and order."
Speaking to them as human beings can be done as
private individuals .
இது என்ன வேடிக்கை. பொது பலசெனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முஸ்லிம்களின் எத்தனை சேனாக்கள் ? ஒரு நாளும் எம் முஸ்லிம்கள் தலைவர்கள் ஒற்றுமை எனும் கையிற்றை பற்றிப் பிடிக்கவில்லை. இறை வசனத்திற்கு மாறு செய்கிறிர்கள். வெவேறு கூட்டமாக செல்கிரிர்களே ? தயவு செய்து ஒரு கூட்டமாக ஒற்றுமையுடன் செல்லுங்கள். எல்லாம் வல்ல அர்ரஹ்மான் கிருபையினால் இன்ஷா அல்லாஹ் நல்லதே நடக்கும்.
ReplyDelete