"பானையிலிருந்த மக்களை அடுப்பில் தள்ளிய, அரசாங்கத்தை தூக்கிலிட வேண்டும்"
கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிலை சின்னத்தின் மூலம் வெற்றி பெற்ற 95 நாடாளுமன்ற உறுப் பினர்களில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனநாயக விரோதமாக கொள்ளையிட்டு மக்கள் ஆணை இல்லாத அரசாங்கத்தை ஏற்படுத்திய மைத்திரிபால சிறிசேன மக்களை பானையில் இருந்து அடுப்பில் தள்ளியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மக்கள் விரோத இந்த அரசாங்கத்தை தூக்கிலிட்டு கொலை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். எகலியகொடையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறு தியையும் நிறைவேற்றவில்லை. பொய்கூறி ஆட்சிக்கு வந்து விட்டு தற்போது மக்களை ஏமாற்றி வருகின்றனர். மகிந்த ஆட்சியில் மக்கள் பெற்ற நிவாரணங்கள் தற்போது படிப்படியாக இரத்துச் செய்யப்பட்டு வருகின்றன. மக்களின் வாழ்வாதார வழிகள் முடக்கப்பட்டுள்ளன.
தேயிலை, இறப்பர் பொருளாதாரம் அழிந்து போயுள்ளது. அரிசி கையிருப்பு அதிகமாக இருக்கின்றது என கூறிய போதிலும் அரிசி விலை குறைக்கப்படவில்லை. மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மக்களுக்கு விளக்க நாங்கள் ஹைட்பார்க் மைதானத்தில் மக்கள் அலையை கூட்டினோம். இந்த மக்கள் அலையை கண்டு அரசாங்கம் அஞ்சியது தற்போது அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

Vera velayee..illayada unakku....
ReplyDeleteYou were respected politician but now you are a dancer...you must rest in your home...
He became telephone booth
ReplyDelete