70 வயது மூதாட்டி, தங்க பிஸ்கட்டுக்களை கடத்துகையில் பிடிபட்டார்
சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு 40 இலட்ச ரூபா பெறுமதியான தங்க பொருட்களை கடத்த முயன்ற வயோதிபப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொடஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவர் இலங்கை விமான நிலையத்திற்கு உரித்தான யூ.எல்.171 விமானத்தில் பெங்களூர் நோக்கி பயணிப்பதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதன்போதே குறித்த வயோதிப பெண்ணை சுங்க வரி அதிகாரிகள் பரிசோதித்துள்ளனர்.
பரிசோதித்ததில் அவரது பையில் சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த தங்க பிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவருக்கு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment