இலங்கையில் முதலீடு செய்ய, இளவரசர் அப்துல் அஸீஸ் பின் பைசல் இணக்கம்
உத்தியபூர்வ விஜயம் மேற்கொண்டு சஊதி அரேபியா சென்றுள்ள ஹிரா பெளண்டேசன் தலைவரும் மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் MLAM ஹிஸ்புழ்ழாஹ் நேற்று சஊதி இளவரசர் அப்துல் அஸீஸ் பின் பைசல் பின் அப்துல் மஜித் அச் சுஊத் அவர்களை அவர்களின் மாளிகையில் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது குறிப்பாக சர்வதேசரீதியிலே பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளிலே ஈடுபாடு கொண்ட இளவரசர் அப்துல் அஸீஸ் பின் பைசல் அவர்களை இலங்கையிலும் முதலீடு செய்யும்மாறும் இலங்கையினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யுமாறும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் கேட்டு கொண்டார். இந்த வேண்டுகோளை ஏற்று கொண்ட இளவரசர் உடனடியாக இலங்கைக்கு விஜயம் செய்வதற்கும் இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை மேற்கொண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தன்னுடைய முழுப் பங்களிப்பை செய்வதாக உறுதியளித்தார்.
அதேபோன்று அமைக்கபட்டுவரும் மட்டகளப்பு பல்கலைக்கழம் தொடர்பாகவும் இளவரசருக்கு விளக்கம் அளித்ததோடு அதற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக இளவரசர் குறிப்பிட்டார். குறிப்பாக சஊதி நாட்டு இளவரசர்கள் சர்வதேசரீதியிலே அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலேயே பாரி பொருளாதார வளர்ச்சியில் தன்னுடைய பங்பளிப்பை வழங்குவது வழக்கம். இலங்கையில் இவ்வாறான எந்தவொரு பொருளாதார முதலீடும் சஊதி இளவரசர்கள் பங்கு பற்றாமல் இருப்பது ஒரு குறையாகும். இதை நிவர்த்தி செய்வதற்காக இளவரசர் உடனடியஆக இலங்கைக்கு விஜயம் செய்து முதலீடை மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்று கொண்டு இலங்கை வருவதாக உறுதியளித்தார். என இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார் . இந்த சந்திப்பில் அப்துல் காதர் மசூர் மொளலானா மற்றும் ஹிரா பெளண்டேசன் செயலாளர் மும்தாஸ் மதனி ஆகியோர் கலந்து கொண்டனர்
Post a Comment