பனாமா கறுப்புப் பணத்தை, ஆராயப்போவதாக இலங்கை அறிவிப்பு
பனாமா இராச்சியத்தின் மொசெக் பொன்சேகா நிறுவனத்தில் பதுக்கியதாக தெரிவிக்கப்படும் இலங்கையர்களின் கறுப்புப் பணம் தொடர்பில் ஆராயவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திர தெரிவித்துள்ளார்.
கறுப்புப் பணம் தொடர்பில் பனாமா நாட்டின் குறித்த நிறுவனத்தின் ஆவணங்கள் கசிந்ததை அடுத்து, அப்பட்டியலில் இலங்கையர்களின் பெயர்களும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த பட்டியலில் இலங்கை வங்கிகளில் தவிர்ந்த வேறு கணக்குகள் வைத்திருப்போர் குறித்து வெளியான தகவல்கள் சந்தேகத்திற்கிடமான எனவும், இலங்கையிலுள்ள தனியுரிமை சட்டத்தின் படி அவ்வாறானோரின் பெயர் விபரங்களை வெளியிடமுடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், குறித்த விடயம் தொடர்பில் மத்திய வங்கி விசாரணை மேற்கொள்ளும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

first of all..pls do for the crimes what you have already in the pending files....then see this panama...!
ReplyDeleteNew political trump called " Panama Money " Itha vachche innum 6 maathamo 1 varudamo otta poranugal.
ReplyDeleteEnaruhindra koottam ( naangal) thirundathavarai ematruhindra arasiyal vaathihal irundu kondu thaan irupparkal