Header Ads



மக்களுக்காக நான் மீளவும், அரசியலில் ஈடுபட வேண்டியுள்ளது - பசில்


அரசியலில் மீளவும் ஈடுபடப் போவதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் தினம் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்கு மூலம் அளித்து திரும்பிய போது, ஊடகவியலளார்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பசில் ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தின் போது விமானப்படை விமானங்களைப் பயன்படுத்தி உள்ளக விமான பயணங்கள் மேற்கொண்டமை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள நான் திட்டமிட்டிருந்தேன். எனினும் நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் சம்பவங்கள் சூழ்நிலைகள் காரணமாக மீளவும் அரசியலில் ஈடுபட வேண்டியேற்பட்டுள்ளது.

மக்கள் விரோத செயல்களே நாட்டில் இடம்பெறுகின்றது, மக்களுக்காக நான் மீளவும் அரசியலில் ஈடுபட வேண்டியுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்தள்ளது.

விவசாயிகள், மீனவர்கள், அரசாங்க ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

தற்போது நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலும் இறையாண்மை தொடர்பிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. This is the best option available for him to shield from current investigation and jail. FCID should expedite their case.

    ReplyDelete
  2. 6 km தூரத்திற்கு அரசாங்க Helicopter ஐ பயன்படுத்தலாமே, அதற்காகவா? Hilton hotel, Appolo hospital என்று எல்லாத்தையும் சுருட்டிக்கொள்ளலாமே, அதற்காகவா?

    ReplyDelete
  3. மக்களுக்காக நீங்கள் ஒன்றும் செய்து கிளிக்க வேண்டாம் அதனைப் பாா்துக்கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள்...

    ReplyDelete

Powered by Blogger.