சிறந்த தீர்வுத்திட்டத்தினை பெற தமிழ், முஸ்லிம் தலைமைகள் இணையவேண்டும் - வியாழேந்திரன் Mp
சிறுபான்மை சமூகம் சிறந்த தீர்வுத்திட்டத்தினை பெறவேண்டுமாகவிருந்தால் தமிழ் அரசியல் தலைமைகளுடன் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இணைந்து பணியாற்றவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி, உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலத்தில் புனரமைக்கப்பட்ட மாணவர்கள் விடுதி 08-04-2016 திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த விடுதியை திறந்துவைத்தார்.
பாடசாலை அதிபர் திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment