"அமீர் அலியை விழாக்களுக்கு அழைப்பது, தமிழினத்துக்கு செய்யும் துரோகம்" - யோகேஸ்வரன்
கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உங்களுக்காக உழைக்கும் போது, அமீர் அலி போன்றவர்களை உங்கள் பகுதிகளுக்கு அழைத்து விருந்து வைக்க வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறான விழாக்களுக்கு அதிதியாக அழைப்பது, நீங்கள் தமிழினத்துக்கு செய்யும் துரோகமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நேற்று -15- பெரியபோரதீவு பட்டாபுர கிராமத்தில் இடம்பெற்ற கலாசார விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் வீட்டுச்சின்னத்திற்கு எதிராக யானைச்சின்னத்திற்கு வாக்களித்தவர்களும் இருந்தீர்கள். அந்த யானைச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழர்களுக்கு அளித்த வாக்குகள் அமீர் அலியை பாராளுமன்ற ஆசனத்தில் அமர்த்தி விட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று என்ன செய்கின்றார் தங்களுடைய இனத்தாலே ஒதுக்கப்பட்ட அந்த முஸ்லிம் பிரதிநிதி தான் பிரதி அமைச்சர் அமீர் அலி. தமிழ் மக்களுடைய வாக்கினை பெற்று பாராளுமன்ற கதிரை ஏறியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்க ஆரம்பித்து விட்டார் என யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் நிராகரிக்காது, மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கியிருக்கின்றார்கள். ஆனால் பிரதி அமைச்சர் அமீர் அலி ஓட்டமாவடி முஸ்லிம் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என குறிப்பிட்டுள்ளார்.
வட்டிக்கு எதிராக வாழும் முஸ்லிம் மக்களை சமுர்த்தி பிரதி அமைச்சராக இருந்த கடந்த காலத்தில் அந்த மக்களுக்கு ஒரு இலட்சம் ரூபாயை கொடுத்து நான் வெற்றி பெற்றால் நீங்கள் தரத்தேவையில்லை என கூறி தற்போது அந்த மக்களை வட்டியோடு கட்ட வைத்திருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவர் எங்களுடைய தமிழ்ப்பகுதிகளிலே ஊடுருவி கூட்டமைப்புக்கு எதிராகப் விமர்சித்து தமிழ் மக்களின் வாக்குகளை கபடத்தனமாக சுரண்ட முற்பட்டிருக்கின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் முதலில் தங்களுடைய இன மக்கள் பற்றி சிந்திக்க வேண்டும். முஸ்லிம் மக்கள் தற்போது பல தேவைகளை பெற வேண்டிய நிலையில் உள்ளனர். இதன்போது, முஸ்லிம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாது, தன்னுடைய சொந்த உறவுகளுக்கு புணானை வீதியில் அரச காணிகளை பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அமீர் அலி பற்றி தான் இவ்வளவு கூறுவதற்கு காரணம், அவரை விளையாட்டுப் போட்டிகளுக்கு அதிதியாக அழைப்பதாக நான் கேள்வியுற்றேன். யார் இந்த அமீர் அலி? மஹிந்த அரசாங்கத்திலே மாகாணசபையில் இருந்துகொண்டு சுகபோகங்களை அனுபவித்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபையில் இருக்கும் போது ஜனாதிபதி தேர்தலுக்கு பூரணமாக ஒத்துழைக்கின்றேன் எங்கள் முஸ்லிம் மக்களை வாக்களிக்கச் செய்கின்றேன் எனக்கு ஒரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தரவேண்டும் என்று கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பிரகாரம், அஸ்வரின் ஆசனத்தையும், சகல சலுகைகளையும் பறித்து நம்பிக்கையின் பேரில் அமீர் அலிக்கு கொடுக்கப்பட்டது. இந்தநிலையில், அவற்றையெல்லாம் அனுபவித்துவிட்டு பின்னர் மைத்திரியின் பக்கம் சென்று விட்டதாக சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கைத் துரோகம் செய்து, காலத்திற்குக் காலம் ஆட்சி பீடமேறும் போது கட்சி தாவும் இவர் என்னுடைய படத்தையும், அரசாங்க அதிபரின் படத்தையும் வைத்து பிரச்சாரம் செய்தார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே அண்மையில் காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் tna அமைச்சர் துரைராஜ சிங்கம் ஐயா அவர்களும் ஜனா அவர்களும் பிரதம அதீதிகளாக பங்கு பற்றினார்கள் எனவே உடனடியாக உங்க கட்சியை கூட்டி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ஒரு வோட்டும் போடாத காத்தான்குடிக்கு என்ன அலிவல் அவர்களுக்கு m s m சாபி அமைப்பாளர் ஜனநாயக கட்சி மட்டக்களப்பு மாவட்டம்
ReplyDelete