Header Ads



ஜும்மா தொழுகையின்போது, பள்ளிவாசலுக்கு தீ வைத்த காவி பயங்கரவாதிகள்



பீகாரின் கோபால்கஞ் மாவட்டம் மிர்கஞ் பகுதியில் உள்ள மதீனா பள்ளிவாசல், 15.04.2016  ஜும்மா தொழுகையின் போது இமாம் குத்பா உரை செய்தார், அந்த வழியாக ராமர் தேரை ஹிந்துத்துவாயினர் அதிகமான ஒலியை ஸ்பிகரில் வைத்து இழுத்து வந்தனர்.

பள்ளி அருகே வந்த போது முஸ்லிம்கள் தொழுகை நடத்திக்கொண்டு இருக்கிறோம் ஆகையால் சத்தம் எழுப்பமால் அமைதியாக கடந்துசெல்ல கூறினர்.

அதற்கு ஹிந்துத்துவாயினர் எதிர்ப்பு தெரிவித்து ஒலியை இன்னும் அதிகப்படுத்தினர், இதனால் இருவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு அதிகமாகியது, கும்பலில் இருந்த சில காவிகள் பள்ளிவாசல் மீது கற்களை எறிந்தனர், அருகில் நிறுத்தப்பட முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தினர்.

இதையடுத்து பக்கத்து கிராமங்களுக்கும் கலவரம் பரவியது, நிலைமை மோசமடைந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாங்கனங்கள் மீது கற்களை எறிந்து தீ வைத்து எரித்தனர் காவிகள்,காவல்துறை கலவரக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீசி மற்றும் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது, காயமடைந்த பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


No comments

Powered by Blogger.