Header Ads



நிதி தொடர்பில் 3 பேரே தீர்மானங்களை எடுப்பர் - மைத்திரி கட்டளை

நிதி நடவடிக்கைகள் மற்றும் மத்திய வங்கி தொடர்பில் தான் உள்ளிட்ட பிரதமர், நிதியமைச்சர் அடங்கிய குழுவே  தீர்மானங்களை எடுக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு பின்னர், அமைச்சரவையின் முதலாவது கூட்டம் நேற்று -19- செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேற்குறிப்பிட்ட இரண்டு விவகாரங்களிலும் தீர்மானங்களை எடுக்கும் போது, அவைத்தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னரே தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

No comments

Powered by Blogger.