Header Ads



15ம் திகதி முதல், பங்கு கொடுக்கல் வாங்கல்கள் மீதான வரி அமுலுக்கு வரும்


2016ம் ஆண்டு வரவு செலவு திட்டம் மூலம் நீக்கப்பட்ட பங்கு கொடுக்கல் வாங்கல்கள் மீதான வரி 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி முதல் மீண்டும் அமுலுக்கு வரும் என்று கொழும்பு பங்குச் சந்தை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பங்கு கொடுக்கல் வாங்கல்களின் போது 0.3% வரி அரசாங்கத்தினால் அறவிடப்பட்டதுடன், 2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின்படி 2016 ஜனவரி 01ம் திகதி முதல் அந்த வரி நீக்கப்பட்டிருந்தது.

அதன்படி பங்கு பரிமாற்றத்தின் போது, முதலீட்டாளரால் செலுத்த வேண்டிய வரி 1.12% இல் இருந்து 0.82% ஆக குறைக்கப்பட்ட புதிய வரித்திருத்தம், மீண்டும் ஏப்ரல் மாதம் 15ம் முதல் 1.12% ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.