PJ இலங்கைவர நிபந்தனை விதித்த, முஸ்லிம் விவகார அமைச்சு - எழுத்துமூல உறுதிவழங்கிய SLTJ
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்தின் தவைவர் பி. ஜெய்னுலாப்தீனின் இலங்கை விஜயத்துக்கு முஸ்லிம் சமய விவகார அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது. ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்திடம் எழுத்து மூல உறுதிமொழிகளைப் பெற்றுக் கொண்டே அனுமதி வழங்கப்பட்டதாக, முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலீம் குறிப்பிட்டுள்ளார். இதகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
கூட்டத்தில் ஏனைய மதங்களைப் பற்றி விமர்சிக்கக் கூடாது. ஏனைய தஃவா அமைப்புகள் பற்றி விமர்சிக்க கூடாது.
விவாதங்களில் ஈடுபடக் கூடாது எனும் நிபந்தனைகளை அமைச்சு விதித்திருந்தது. ஸ்ரீ லங்கா தௌஹித் ஜமாஅத் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதையடுத்தே அனுமதி வழங்கப்பட்டது என்றார்.

Thawkaarana neneythaal siruppuththaan warudu
ReplyDelete