குர்ஆன் மொழி பெயர்ப்புகளை, அமைப்புகள் வெளியிட தடை - தஃவா அமைப்புகளை ஒன்றுசேர்க்கவும் திட்டம்
-ARA.Fareel-
நாட்டில் இயங்கிவரும் அனைத்து தஃவா அமைப்புகளையும் பட்டியலிட்டு அவ் அமைப்புகளை கட்டம் கட்டமாக அழைத்து சுமுகமான பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
தஃவா அமைப்புகளுக்கு மத்தியில் நிலவும் முரண்பாடுகளைத் தீர்த்து ஒருங்கிணைப்பதற்காகவே இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ‘Vi” க்கு கருத்து தெரிவிக்கையில்;
‘தற்போது எமது நாட்டில் பல்வேறு தஃவா அமைப்புகள் இயங்கி வருகின்றன. இவ்வமைப்புகள் கொள்கை ரீதியில் முரண்பட்டுள்ளன. பள்ளிவாசல்களை நிர்மாணிப்பதில் கூட இவ் அமைப்புகளுக்கு இடையில் போட்டி நிலவுகின்றன. இதனால் எமது சமூகத்தில் ஒற்றுமை இல்லை என ஏனைய சமூகங்கள் கருதும் நிலை உருவாகிறது.
இதனால் அனைத்து தஃவா அமைப்புகளையும் கட்டம் கட்டமாக தனித் தனியே அழைத்து பேச்சுவார்த்தை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறான பேச்சுவார்த்தைகளின் பின்பு அமைச்சு பொதுவான கலந்துரையாடலை நடாத்தி முரண்பாடுகளை தீர்ப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.
குர்ஆன் மொழி பெயர்ப்புகள் கூட அமைப்புகளினால் தனித் தனியே முன்னெடுக்கப்படுகின்றன.எதிர்காலத்தில் இதற்குத் தடை விதிக்கப்படவுள்ளது. குர்ஆன் மொழி பெயர்ப்புகளை முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுமதியின்றி எவருக்கும் மொழிபெயர்ப்புச் செய்து வெளியிட முடியாது.

Alhamdulillah. good decision
ReplyDeletevery good move
ReplyDeleteBest Decision
ReplyDeleteDear Minister Haleem, Pls given to full power to ACJU
ReplyDeleteVery good decision, but its too late now...
ReplyDeleteThere should be a leadership, all movements / jamaths should be under an umbrella, definitely, no doubt, will be the most tough task....may Almighty Allah shower his blessings to all those who involved....
அனைவரும் ஒன்றுபட ஒரேஒரு வாய்புத்தான் உள்ளது அது "லாஇலாஹ இல்ல அல்லாஹூ முஹம்மது ரசூலுல்லாஹ்" என்பதை ஆராய்ந்து நெறிப்படுத்தும்போது மட்டும்தான் இன்ஷா அல்லாஹ்.
ReplyDeleteமிகவும் நல்லதொரு விடயம் கட்டாயம் அமுல்படுத்தவும்.இல்லாவிட்டால் இன்னும் சில நாட்களில் தப்லீக் குர்ஆன்,தொளஹித் குர்ஆன்.ஜமாத்தே இச்லாமி குர்ஆன்,P.J
ReplyDeleteகுர்ஆன்,தரீக்கா குர்ஆன் என்று வரும் காலம் தொலைவில் இல்லை
எல்லோருக்கும் சமமான தீர்வு வந்தால் சிறந்தது மாறாக நற்பொழுது நடைமுறையில் உள்ளது போன்ற சுயநலவாதிகளுக்கு மாத்திரம் அல்லது ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் தலைவர்களின் கையில் சென்றால் சுமூகமான முடிவு வராது, காரணம் acju ஒரு பொதுவான இயக்கம் என நம்பிய மக்களுககு அது ஏமாற்றத்தையே கொடுத்தது sltj தர்ஜமா வெளியிடும் பொழுது நடுநிலமையை கையாள வேண்டிய இவர்கள் எரிகிற நெருப்பில் இன்னும் எண்ணையை வாறி ஊற்றினார்கள், அதுவும் பொறுப்புள்ளவர்கள் யாரும் கையொப்பிடாமல் நழுவியது வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது.
ReplyDelete