Header Ads



நல்லாட்சிக்கு வெட்கம், போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு அடிபணிந்த அமைச்சர்

நல்லாட்சி அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவரான தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக செயற்பட்ட மருத்துவர் நிலந்த சமரசிங்க, கடந்த ஜனவரி தொடக்கம் நல்லாட்சி அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டுவருவதில் முன்னின்று கடுமையாக உழைத்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அணியில் இருக்கும் முக்கியமான அரசியல்வாதிகளுக்கு போதைப் பொருள் வர்த்தகத்துடன் இருக்கும் தொடர்புகளை துணிச்சலாக அம்பலப்படுத்தியிருந்த அவர், போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தார்.

தெற்காசிய புலனாய்வு வலையமைப்பு ஒன்றினூடாக போதைப்பொருள் கடத்தலை முறியடிப்பதற்கான முயற்சிகளிலும் மருத்துவர் நிலந்த சமரசிங்க பெரும் வெற்றிகளை ஈட்டியிருந்தார்.

இவ்வாறான நிலையில் மருத்துவர் நிலந்த சமரசிங்க எதுவித காரணமும் இன்றி நேற்று முதல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் திலக் மாரப்பன இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகர்களின் அழுத்தம் காரணமாக தான் பதவி விலக்கப்பட்டிருக்கலாம் என்று அவர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்தார்.

5 comments:

  1. Well done good governance. The public in Sri Lanka never understand the fact that an honest officer can not work in Sri Lanka. They are subject to political harassment and a minister can simply play his role on them. On top of this the President invited the Sri Lankans in Thailand to come to Sri Lanka again and serve the country. Actually it's not serve the country but to serve this politicians. The President is a man of morals but the rest of the government is repeating the same that let down the Ex President.

    ReplyDelete
  2. Thilak Marappana is becoming a big black spot on the whole Good Governance, being on retainer of Avant guard Chairman while being the minister of law and order and now this.. MS&RW will have to make a decision on him, big time..

    ReplyDelete
  3. Hon Thilak Marappena don't know about the good governance politics. We are her shy

    ReplyDelete
  4. மஹீந்த ஆட்சியில் தவருகலை சுட்டிக்காட்ட பயந்தவர்கள் நல்லாட்சிவந்ததும் துனிச்சலாக முன் நடந்தவைகலை சொல்லமுன்வந்தனர் சொல்லவதற்கும் ஆர்வத்தோடும் இருக்கின்ரனர் ஆனால் நல்லாட்சியாலர்கள் இவ்வாரு செயல்பட்டால் சாட்சியாலர்களே மரைந்துவிடுவார்கள் தற்போது நல்லாட்சியாலர்கள் சிலவிடயங்கலில் இருந்து ஒழிந்து கொல்வதுபோல் தெரிகின்றது

    ReplyDelete
  5. We are living in the Banana state. No Law, no order, the person who stole Rs. 20 was jailed for 10 years. the politicians stole Billions got Scot free. LTTE leaders are freed. LTTE cadres are in jail.

    ReplyDelete

Powered by Blogger.