பலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல்கொடுக்க, இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் உறுதி
இலங்கை நாட்டுக்கான பலஸ்தீன் தூதுவருக்கும், இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று பலஸ்தீன் நாட்டுக்கான இலங்கைத் தூதுவரின் இல்லத்தில் வியாழக்கிழமை 5 ஆம் திகதி, இரவு நடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பில் கலந்துகொண்ட மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இதுகுறித்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறுகையில்,
பலஸ்தீனில் வாழும், வாடும் எமது உறவுகளின் தற்போதைய நிலை குறித்து இலங்கைக்கான பலஸ்தீன் நாட்டுத் தூதுவர் விளக்கமாக கூறினார். அவை எமது மனதை நெருடுவதாக அமைந்தது. கடந்த சில வாரங்ளாக பலஸ்தீன முஸ்லிம்களுக்கு கிடைக்கவேண்டிய குடிநீரைக் கூட இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் நிறுத்திவைத்து, அங்குள்ள முஸ்லிம் உறவுகளுக்கு கொடுமை புரிகின்றனர்.
முஸ்லிம்களுக்குச் சொந்தமான புனித மஸ்ஜித்துல் அக்ஸாவை சுற்றியும், அதை காப்பாற்றுவதற்காக புனிதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலஸ்தீனர்களுக்கு எதிராக ஆக்கிரமிப்பு இஸ்ரேல் வன்முறைகளை ஏவிவிட்டு அராஜகம் புரிந்துவருவதையும் விளக்கிய பலஸ்தீன தூதுவர் இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளும், அரசாங்கமும், முஸ்லிம் சமூகமும், ஒட்டுமொத்த இலங்கையர்களும் இஸ்ரேலின் அராஜகத்தை கண்டிக்கவும், அக்ஸாவின் விடுதலைக்காகவும் பலஸ்தீனத்திற்கு உதவ முன்வர வேண்டுமென உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
ஆம் பலஸ்தீனத்திற்கு தமது முழுமையான ஆதரவை வெளிப்படுவத்துவதாக இதன்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் சகலரும் ஒருமித்த குரலில் வாக்குறுதி வழங்கினர்.
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் கூடியவிரைவில் பேசுவதாகவும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இதன்போது இலங்கைக்கான பலஸ்தீன தூதுவரிடம் வாக்குறுதி வழங்கினர் எனவும் அமைச்சர் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் அமைச்சர்களான கபீர் காசிம், ரவூப் ஹக்கீம் றிசாத் பதியுதீன். பைசர் முஸ்தபா, ஹலீம், பௌஸி உள்ளிட்ட மற்றும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் பங்கேற்றுள்ளனர்.
இந்த சந்திப்பில் அமைச்சர்களான கபீர் காசிம், ரவூப் ஹக்கீம் றிசாத் பதியுதீன். பைசர் முஸ்தபா, ஹலீம், பௌஸி உள்ளிட்ட மற்றும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் பங்கேற்றுள்ளனர்.

Masha allah
ReplyDeleteWeldone our muslims politicians.
Masha allah
ReplyDeleteWeldone our muslims politicians.