இலங்கையின் வளர் பிறையை மறைக்கும் மேகங்கள்; நூல் வெளியீடு
இலங்கையில் அண்மையில் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்ட Clouding The Crescent in Sri Lanka- இலங்கையில் முஸ்லிம்களுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிராக மேற்கொள்ளப்படுகின்ற அரசியல்,இன,மத ரீதியான அடக்கு முறைகள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதாக தொகுக்கப்பட்ட புத்தகம் எதிர்வரும் 28 நவம்பர் 2015 (5-7.30 pm) ல் ஐக்கிய இராஜ்ஜியத்தில் Harrow - Sri Lanka Muslim Cultural Centre ல் வெளியிடப்பட உள்ளது.
Council of Srilankan Muslims Organisation in UK ஒழுங்கமைப்பில் இடம்பெற ஏற்பாடாகியுள்ள இன் நிகழ்வில் பிரதான பேச்சாளராக DR ATAULLAH SIDDIQI, HEAD OF DEPT. PLURALISM AND INTER FAITH RELATIONS. MARKFIELD INSTITUTE OF HIGHER EDUCATION. LEICESTER அவர்களும்,
நூலாய்வாளராக MR IRFAN IQBAL, EDITOR SONAKAR.COM அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்
நூலாசிரியரான Mr. Lukman Harees LLB, MBA, இலங்கையின் காலிப்பகுதியைப் பிறப்பிடமாகவும் கவ்டான, அத்திடிய வீதி,தெஹிவளையை வதிவிடமாகவும், தற்போது பிறித்தனியாவில் READING பகுதியில் வசித்து வருபவராவார்.
இவரால் 2012 ல் THE MIRAGE OF DIGNITY ON THE HIGHWAYS OF HUMAN ‘PROGRESS’ என்ற புத்தகம் ஏற்கனவே UK இல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்
MR. LUKMAN HAREES அவர்கள் மறைந்த முன்னால் அட்டாளைச்சேனை அரச ஆசிரியர் கல்லூரியின் விரிவுரையாளரறும் தமிழ் கவிஞறுமான காலி பகுதியைச் சேர்ந்த M.S.M HAREES மற்றும் HUSNA HAREES ஆகியோரின் புதல்வராவார். இவர் GALLE St ALOYSIUS COLLEGE மற்றும் ROYAL COLLEGE COLOMBO இன் பழைய மாணவராவார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் LLB பட்டம் மற்றும் இலங்கை ஸ்ரீ ஜெயவர்தன பல்கலைக்கழகத்தில் MBA முடித்த இவர் தற்போது தனது கலாநிதி (PHD) பட்டப் படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்.
ஆங்கிலம்,சிங்களம்,தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்ற இவர் இலங்கை COMMERCIAL BANK இல் நீண்ட காலம் பணியாற்றியோதோடு அதன் மனிதவளப் பகுதியின் தலைவராகவும் பணியாற்றியுள்ள இவர் தொடர்சியான அரசியல் கட்டுரைகளையும் இஸ்லாமிய ஆக்கங்களையும் இலங்கை பத்திரிகைகளுக்கு எழுதிவந்துள்ளார். அத்தோடு 2004 ஆம் ஆண்டு “THEVATHA (3 FACES)” என்ற தலைப்பில் ISLAM AND PHILOSOPHY IN LIFE என்ற கவிதை நூலையும் சிங்கள மொழியில் வெளியிட்டுள்ளார். இலங்கையின் தினசரி, வாராந்த ஆங்கில ஏடுகளில் ஆக்கங்கள் எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது இவரினால் எழுதப்பட்ட Clouding The Crescent In Sri Lanka, (A well researched documentary on the rise and fall of communal politics in Sri Lanka , with special reference to the recent hate campaign against the Muslims) என்ற நூல் சுமார் 493 பக்கங்களையும் 5 பிறிவுகளையும் கொண்டதாகவும்,இலகுவான ஆங்கில மொழிநடையிலும் எழுதப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இன் நூல் வெளியீடானது இலங்கையர்களான எம் அணைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஒரு விடயமாகும்.
Ismath Bawa.

Post a Comment