Header Ads



இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை சேகரித்து, ஒட்டுமொத்த சிரியர்களையும் வெளியேற்றுவேன் - டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவில் வசித்து வரும் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை சேகரிக்க வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் கூறியிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு கட்சி சார்பாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், பாரீஸ் தாக்குதலுக்கு பிறகு, அமெரிக்காவில் பல விடயங்களை கூர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, அமெரிக்காவில் வசித்து வரும் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை சேகரிப்பதுடன் அவர்களின் முகவரிகள், பணியிடங்கள் உள்ளிட்ட தகவல்களையும் கணக்கெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், ஜனாதிபதியாக தான் வெற்றி பெற்றால், இதனை கட்டாயமாக செயல்படுத்துவேன் என கூறியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் இந்த கருத்து பல தரப்பினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியை அடால்ப் ஹிட்லர் ஆட்சி செய்தபோது அந்நாட்டில் வசித்து வந்த யூதர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உத்தரவிட்ட சர்வாதிகார போக்கை போன்று டொனால் ட்ரம்ப் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் குடியேற முயற்சித்து வரும் சிரியா நாட்டு அகதிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த டொனால்ட், ‘அமெரிக்காவின் ஜனாதிபதியாக தான் தெரிவு செய்யப்பட்டால், இந்நாட்டில் குடியேறியுள்ள ஒட்டுமொத்த சிரிய அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவேன்.

இந்த நடவடிக்கையை மேற்கொள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு துணிச்சல் இருக்காது என்றும் அவர் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர் இல்லை என்றும் டொனால்ட் ட்ரம்ப் பரபரப்பாக பேசியுள்ளார்.

No comments

Powered by Blogger.