'I am Sorry' எனும் ஒரு சொல்லில், எல்லாம் தீர்ந்துவிடுமா டோனி பிளேர்..?
அமெரிக்காவின் CNN ஒளிபரப்பாளர்களுக்கு வழங்கிய நேற்காணலில் முன்னால் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், சத்தாம் ஹுஸைனின் இராக் மீது தாங்கள் படையெடுத்து அழித்தது தவறுதான் எனவும், அதன் விளைவாகவே இன்று ISIS தோன்றியுள்ளது எனவும் ஒத்துக்கொண்டுள்ளார்.
காலம் கடந்த இந்த மனச்சாட்சி உறுத்தலால் யாருக்குப் பயன்? எத்தனை லட்சம் மக்களை அழித்தீர்கள்? எத்தனை லட்சம் மக்களை இன்று அகதிகளாக்கியுள்ளீர்கள்? I am Sorry எனும் ஒரு சொல்லில் எல்லாம் தீர்ந்துவிடுமா டோனி பிளேய்ர்?
வரலாறு உங்களை எப்படி மன்னிக்கும்?
உலகில் அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த இருமுகங்கள் கதாஃபியும், சத்தாமும் ஆவர். இவ்விருவரையும் அமெரிக்கா திட்டமிட்டு பழிதீர்த்தது. அவ்விருவரின் மறைவிற்குப் பின் அந்த நாடுகளின் அரசியலே மாறிப்போனது.
சத்தாமின் மறைவுக்குப் பிறகு தான் இராக்கில் பயங்கரவாதம் பரவியது. அது இராக்கோடு நின்றுவிடாமல் சிரியாவையும், ஏமனையும் அழித்திருக்கிறது.
கதாஃபியின் ஆட்சிக் காலத்தில் வலுவான நாடாகத் திகழ்ந்த லிபியா அவரின் மறைவுக்கிப்பிறகு நிலைகுலைந்திருக்கிறது. இந்த இரு தலைவர்களும் அதிகாரத்தில் நிலைத்திருந்தால் உலகம் அமைதியாக இருந்திருக்கும்.
இப்படி கூறியிருப்பவர் யார் என்று நினைக்கிறீர்கள்? சுப்பனோ குப்பனோ அல்ல, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான ஒபாமாவின் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஹில்லாரியை எதிர்த்து போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் ட்ரம்ப்.
இவர்களை செத்துப்போனவ்ரகள் மன்னிப்பார்களா?
உலகம் இவரைப்போன்ற பசுத்தோல் போர்த்திய புலியை மன்னிக்குமா?
இன்னும் எவ்வளவு காலத்திற்கு இவர்களைப்போன்ற நயவஞ்சகத்தனத்தை மூச்சுக்காற்றாக கொண்டு வாழும் உண்மையான பயங்கரவாதிகளை உலகம் கண்டும் காணாமல் தூங்கிக்கொண்டிருக்கும்?
- சமூக நீதி
Why Tony Blair Is A War Criminal Who Should Be On Trial In The Hague
TONY BLAIR has finally said sorry for the Iraq War – and admitted he could be partly to blame for the rise of Islamic State.
Blair's half-apology for Iraq follows a week after the leaking of the White House memo that proved his war crimes' guilt.

Post a Comment