Header Ads



SLIF UK ன் வருடாந்த தேசிய மாநாடு 2015

ஐக்கிய இராட்சியத்தில் இயங்கி வரும் Srilanka Islamic Forum (SLIF UK ) ன் 12 வது வருடாந்த தேசிய மாநாடு வரும் சனிக்கிழமை அக்டோபர் 3ம் திகதி காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை Luton ல் உள்ள VENUE 360 எனும் அரங்கத்தில் நடைப் பெறவுள்ளது.

இம்மாநாடானது அல் குர்ஆனின் அத்தியாயம் 55,வசனம் 9ல் ''நீதியை கொண்டு நடுநிலைமையை நிலைநாட்டுங்கள்; வரம்பு மீறாதீர்கள்.'' எனும் இறை வசனத்தை மையமாகக் கொண்டு ''எமது வாழ்வில் சமநிலையை பேணுதல்  ''எனும் தலைப்பில் நடைப்பெற உள்ளது.
    
  சிறுவர் முதல் பெரியோர் வரை சமூகத்தில் அனைத்து தரப்பினரும் பயன் பெரும் வகையில் இம்மாநாட்டின் அனைத்து நிகழ்வுகளும் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ள அதேவேளை இளைஞர், யுவதிகளுக்காக (youth conference) விஷேடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு சிறுவர்களுக்கான சுவாரஷ்யமான விளையாட்டு நிகழ்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கமைய, இம்மாநாட்டில் தலைசிறந்த பிரபல்யமான கல்விமான்களால் ஆங்கிலம்,தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உரைகள் நடாத்தப்படவுள்ளன. அவர்களுள் As-Shk யூசுப் முப்தி, As-Shk அத்னான் ராஷித், Imam அஜ்மல் மஸ்ரூர், Br பாரூக் முராத், As-Shk M.J.M.மன்சூர் ஆகியோர் குறிப்பிடத்தக்க பேச்சாளர்களாவர்.

மிகவும் பயன்தரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டில் தங்கள் குடும்பம் சகிதம் கலந்து,சிறப்பித்து, பயன்பெறுமாறு அனைத்து சகோதர சகோதரிகளையும், SLIF ஏற்பாட்டுக் குழு அன்புடன் அழைக்கின்றது. 
  
தங்கள் வரவுகளை பின்வரும் இணையத்தளத்திற்கு சென்று பதிந்து கொள்ளுங்கள்

For more information Please Visit www.slif.org.uk

Sri Lanka Islamic Forum UK
               3rd Floor, LMC Business Wing, 38-44 Whitechapel Road, London E1 1JX.
Hotline: +44 (0)78 7799 7626 Fax: 0044 208 2141 331
E-mail: info@slif.org.uk Web: www.slif.org.uk

1 comment:

Powered by Blogger.