ஜெனிவாவில் இலங்கை, எவருக்கும் அடிபணிந்துவிடவில்லை - ரணில்
ஜெனிவாவில் இலங்கை எவருக்கும் அடிபணிந்துவிடவில்லை எனவும் எமது நாட்டு மக்களுக்கு மாத்திரமே அடிபணிய வேண்டிய தேவை உள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைக் கூறினார்.
இதேவேளை, இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் காணப்படும் சாதகமான சூழ்நிலை காரணமாக GSP+ சலுகையை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டார்.

Post a Comment