சுவிஸ் வங்கிகளில் உள்ள பணத்தை, இலங்கையில் வைப்பிலிடுங்கள் - ரவி கருணாநாயக்கா
சுவிஸர்லாந்து நாட்டின் வங்கிகளில் பணத்தை வைப்புச் செய்துள்ள இலங்கையர்களை, இலங்கை வங்கிகளில் வைப்புச் செய்யுமாறு கோரிக்கை விடுப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் வங்கிகளில் இருந்து பணத்தை இலங்கைக்கு மாற்றம் செய்யும் போது எவ்வித விசாரணைகளும் நடத்தப்பட மாட்டாது எனவும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டவர்களில் வங்கி கணக்குகளை மூட சில சுவிஸ் வங்கிகள் தீர்மானித்துள்ளன. இது இலங்கைக்கு சாதகமாக இருக்கும் எனவும் நிதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment