கழுத்தில் தூக்குக் கயிற்றை, வைத்துக்கொண்டது நீங்கள்தான் - ரணில்
ஜெனிவா அறிக்கை தொடர்பில் தெளிவூட்டும் சமாதானத்திற்கான தேசிய அமைப்பின் மாநாடு இன்று (02)இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பின்வருமாறு தெரிவித்தார்.
நாட்டில் ஜனநாயகத்தை ஸ்தாபித்து தேசிய சமாதானத்தை ஏற்படுத்த முயன்றமையால் உலகம் எம்மை ஏற்றுக்கொண்டது. மக்களின் இறையாண்மை பாதுகாக்கப்பட்டது. தற்போது இதற்கு யார் எதிராக உள்ளனர்? இதனைப் பாரிய சம்பவமாகக் கூறுவார்களாயின் அவர்களுக்கு ஒரு விடயத்தைக் கூற விரும்புகின்றேன். கழுத்தில் தூக்குக் கயிற்றை வைத்துக் கொண்டது நீங்கள் தான். அதிலிருந்து நாங்கள் காப்பாற்றியுள்ளோம். இரண்டு பக்கங்களிலும் குறைபாடுகள் காணப்பட்டன. இவை மீண்டும் ஏற்படாது இருக்க நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதில் தான் தேசிய ஒற்றுமை ஏற்படும். இது இராணுவத்தைக் காட்டிக்கொடுக்கம் செயற்பாடு அல்ல.

Post a Comment