Header Ads



வடமாகாண முஸ்லிம்களை, அகதிகளாகவே வைத்திருக்க முயற்சியா..?

-யு.எச். ஹைதர் அலி -

இலங்கையின் வடமாகாண முஸ்லிம் சமூகம் 1990ம் ஆண்டு விடுதலை புலிகள் மூலம் வெளியேற்றி 25 வருடத்தை எட்டி விட்டது.

உலகில் எந்த ஒரு சமூகமும் அனுபவத்திராத துன்பத்தை இலங்கையில் எமது முஸ்லிம்கள் இந்த யுத்தத்தினால் அனுபவித்தார்கள். சுமார் ஓரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கடந்த 25 வருடகாலமாக தனது சொந்த பூமியை இழந்து அகதி வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கும் துர்ப்பாக்கியம்,  இந்த சமூகம் அகதி முகாமில் பிறந்து, அகதி முகாமில் வாழ்ந்து, அங்கே படித்து, அங்கே திருமணம் செய்து, அந்த அகதி முகாமிளேயே பிள்ளையும் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கின்ற அவல நிலை. இன்று யுத்தம் முடிந்தும் இவர்கள் தமது சொந்த பூமிக்கு செல்ல முடியாமல் படுகின்ற துன்பங்கள் இன்னோரன்ன.

இந்த நாடு சந்தித்த மூன்று தசாப்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பல முஸ்லிம் நாடுகள் நேரடியாகவும் மறை முகமாகவும் உதவி செய்து யுத்தத்திற்கு பாரிய பங்களிப்பை இலங்கை அரசிற்கு வழங்கி இருகிறது.

சவுதி அரேபியா, ஈரான் உற்பட பல மத்தியகிழக்கு,  நாடுகள்  இலங்கையின்   பொருளாதாரத்திற்கு பாரிய உதவிகளை செய்து வருகிறது. முதலீடுகள் மற்றும் நீண்டகால கடன்திட்டத்தில் எமது நாட்டிற்கு மசகு எண்ணை வழங்கி உதவுவதையும் நாம் அறிவோம்  இந்த உதவிகள் அனைத்தும் அந்த நாடுகளின் அரசியல் நோக்கை மையமாகவைத்தே இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்த பெற்றோளிய வள முஸ்லிம் நாடுகள் நினைத்தால் இந்த இடம் பெயர்ந்து வாழும் வடமாகண முஸ்லிம்களை ஓர் இரு மாதங்களுக்குள்ளேயே மீள் குடி யேற்றுவதற்கான உதவிகளை மேற் கொள்ள முடியும்.

மத்திய கிழக்கை தலமாக கொண்டு இயங்கும் முஸ்லிம் அரச சார்பற்ற இயக்கங்கள் தத்தமது கொள்கைகளை பரப்ப பாரிய அளவில் றியாழ்களை முதலீடு செய்து இலங்கை முஸ்லிம்களின் கலாச்சார பாரம் பரியங்களை அளித்தும் வஹ்ஹாபி தீவிரவாதத்தையும் இஸ்லாமிய தீவிரவாதத்தையும் வளர்த்து இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினையை வளர்க்க எடுக்கும் முயற்ச்சியை  முஸ்லிம்கள் மீள் குடியேற்ற விடயத்தில் இந்த அமைப்புக்களும் அரசார்பற்ற நிறுவனங்களும் அக்கறை காட்டாமல் தொடர்ந்தும் மௌனம் காக்கின்றனர்.

இலங்கையில் இருக்கும் முஸ்லிம் இனவாத பிரதேசவாத அரசியல் கட்சிகள் யாழ் முஸ்லிம்களின் அகதிவாழ்க்கையை முதலீடு செய்தும் பிறச்சாரம் செய்தும்  அரசியல் இலாபம் ஈட்டியும் தங்களது வாழ்க்கையையும் தாம் சார்ந்த குடும்பங்களையும் வளம் பெறச் செய்துள்ளனர்.

மற்றும் சில முஸ்லிம் அரசியல் வாதிகள் தானும் புலிகளால் விரட்டப்பட்டவன் , தானும் சகலதையும் இழந்து அகதியாக வந்தவன் தான் என்றும், முஸ்லிம் இனவாதத்தை தூண்டியும் மக்களின் வாக்குகளை பெற்று தம் வாழ்க்கையையும் தாம் சார்ந்த குடும்பத்தினரையும் வலமாக வாழ வைத்துள்ளனர்.  

இந்த 25 வருடமாக அகதி வாழ்க்கையை நாளுக்கு நாள் படு மோசமாகவும் புத்தளத்தை பூர்வீகமாக கொண்ட மக்களுக்கும் வட மாகாணத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களுக்கும் இடையில் பிரதேச வாதத்தை தூண்டி பிரிவினைகளை தனது அரசியல் நலன்களுக்காக உண்டாக்கிய  வங்குரோத்து அரசியல் வாதிகளும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இருப்பது கேவலமானது.

புலிகளால் 24 நேரத்திற்குள் வெளியேற்றப்பட்டு இடம் பெயர்ந்து வாழ்ந்த அப்பாவி மக்களை இருபது இருப்த்தி இரண்டு வருடங்களின் பின்பு மீள் குடியேற்றம் எனும் பெயரில் அவர்களது  உணர்வுகளை தூண்டி நீதிமன்றத்திற்கு கல் எரிய வைத்து அவர்கள் மத்தியில் வன்முறை கலாச்சாரத்தையும் வளர்த்த கீழ் தரமான அரசியல் வாதிகளும் எம் மத்தியில் இருப்பதையிட்டு முஸ்லிம் சமூகம் வெட்கித் தலை குனிய வேன்டிய சூழ்நிலைக்கு இட்டுச்சென்றிருக்கிறது.

யுத்தம் முடிவுற்றதன் பின்பு மீள் குடியேற்ற அமைச்சராக முஸ்லிம் ஒருவர் இருந்தும் இந்த வடமாகாண முஸ்லிம்களை தொடர்ந்தும் அகதிகளாகவே வைத்திருந்த பெருமை இந்த முஸ்லிம் அமைச்சரையே சாரும். இவர் பாரம்பரிய தமிழ் மக்கள் வாழ்ந்த கிராமங்களில் அமைச்சர் பெசில் ராஜபக்சவுடன் இனைந்து சிங்கள குடியேற்றங்களை அமைத்து தமிழ் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் இன விரிசளை தொடர்ந்ந்தும் வளர்க்கவும் முற் பட்டிருக்கிறார்.  தன்னுடைய அரசியல் இலாபத்திற்காக வடமாகாண முஸ்லிம் இடம் பெயர்ந்தவர்களை மீள் குடி யேற்றுவதாக நாடகமாடி தன்னுடைய வாக்குபிரதேசத்தில் உள்ளவர்களை மாத்திரம் குடியேற்ற முற்பட்ட இவ்வாறான பிரதேசவாத அரசியல் வாதிகளும் நம் மத்தியில் இருக்கிறார்கள் .

இது போன்ற இனவாத பிரதேச வாத சந்தர்ப்பவாத வயிர்றுவளர்க்கும் அரசியல் வதிகளும் , இயக்கம் வளர்க்கும் இயக்கவாதிகளும், அரபு நாட்டு  NGO க்கள் முலம் பிரிவினையை வளர்க்கும் அமைப்புக்களும் நம் மத்தியில் இருக்கும் வரை இந்த வடமாகாண அகதிகள் தொடர்ந்தும் அகதிகளாகவே வைக்க முற்படுவார்கள்.

3 comments:

  1. நண்பர்களே, யாராவது விளக்கம் தாருங்கள். இலங்கையில் தமிழர்கள், முஸ்லிம்கள் என்று ஒரே இனம் எப்படி இரண்டாக பிரிந்தது?

    தமிழர் என்பது ஒரு இனம் அல்லவா? தமிழர் என்னும் இனத்தில் இந்துக்கள், இந்துக்களில் உள்ள ஆயிரம் ஜாதிகள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், தமிழ் பேசும் பெளத்தர்கள், நாத்தீகர்கள் போன்றவர்கள் அடங்குவார்கள் அல்லவா?

    இலங்கையில் எப்படி இனத்தில் இருந்து மதம் பிரிந்தது?

    யாராவது விளக்குவீர்களா? இனம், மதம், எப்படி சமனாகும்? புரியவில்லை. விளக்கம் தேவை.

    ReplyDelete
    Replies
    1. சிலவற்றை சிலருக்கு புரியவைக்க இயலாது எம்மை விட்டு வெளியில் வந்து பார்த்தால் தான் எமது குறைகள் எமக்கு தெரியும்

      Delete
  2. Helo Mr. Haider, you didnt write this article with your original mind....So, you are telling to the Sri lankan people that Muslims Countries they are supporting terrorists group....!!!
    the Jaffnamuslim.com...pls verify whatever before you publish, this is really very...big damage this person by creating this low level and vorst articles...
    Dear Jaffnamuslim.com....can you concern this...?

    ReplyDelete

Powered by Blogger.