Header Ads



அம்பாரையில் பாய்ந்துவரும் வெள்ளம் (படங்கள்)


(எம்.எம்.ஜபீர்)

அம்பாரை மாவட்டத்தில் நேற்று முதல் பெய்துவரும் அடைமழை காரணமாக இன்று சொறிக்கல்முனை வழுக்கமடு வீதியின் மேலாக வெள்ளம் பாய்ந்து வருவதால் இவ்வீதியூடாக போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் சம்மாந்துறை நகரையும் இணைக்கும் இவ்வீதியூடாக சொறிக்கல்முனை, 6ஆம் கொளனி, சவளக்கடை, ஏத்தாளைக்குள,வீரச்சோலை போன்ற பிரதேச மக்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.




No comments

Powered by Blogger.