இஸ்லாஹ் டிரஸ்ட்டின் 'அல் இஸ்லாஹ்' சஞ்சிகை + இணையத்தள வெளியீடும்
இங்கிலாந்தின் லெஸ்டர் மாநகரில் 2014 ம் ஆண்டு மே மாதம் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்லாஹ் டிரஸ்ட் எனும் நிறுவனம் இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் பல சமூக பணிகளில் ஈடுபட்டு வருவதை அறிவீர்கள்.
வாராந்த ஜும்மா தொழுகை, வாராந்த தஜ்வீத் வகுப்பு, மாதாந்த தர்பிய்யா ஆன்மீகப் பயிற்சி, சுகாதார வழிகாட்டல் பயிற்சி முகாம், ஆண்கள் பெண்கள் சிறுவர்களுக்கான பிரத்தியேக விளையாட்டு நிகழ்ச்சிகள், 6ம் வருட மாணவ மாணவிகளுக்கான கணிதம் மற்றும் ஆங்கில படங்களுக்கான விசேட வகுப்புகள், ரமலான் மாத விசேட இப்தார் மற்றும் தராவிஹ் ஏற்பாடுகள், இரு பெருநாள் தொழுகை மற்றும் ஆண்கள் பெண்கள் சிறுவர்களுக்கென பிரத்தியேகமான பெருநாள் நிகழ்ச்சிகள், கோடை கால விளையாட்டு நிகழ்ச்சியுடன் கூடிய குடும்ப ஒன்று கூடல் என சமூகத்துக்கு தேவையான பல அம்சங்களை இஸ்லாஹ் டிரஸ்ட் மிக சிறப்பாக திட்டமிட்டு முன்னெடுத்து நடாத்தி வருகின்றது என்றால் மிகையாகாது.
ஜனாஸா நிதியும் அது சார்ந்த ஏற்பாடுகளும் இஸ்லாஹ் நிறுவனத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க வேலைத் திட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இலங்கை முஸ்லிம்களுக்கு மாத்திரமல்லாமல் லெஸ்டர் வாழ் மக்களுக்கும் தாம் செய்து வரும் சமூகப் பணிகள் சிறப்பாக கிடைப்பதற்கு ஓர் இணைய தளமும் தொடர் சஞ்சிகையும் அவசியம் என கருதிய இஸ்லாஹ் நிர்வாகம் www.islahtrust.co.uk என்ற இணைய தளத்தையும் Al Islah என்ற தொடர் சஞ்சிகையையும் வெளியிட தீர்மானித்து கடந்த 18/10/2015 ஞாயிற்று கிழமை விசேட சஞ்சிகை வெளியீட்டு விழாவையும் ஏற்பாடு செய்திருந்தது. பகல் 2.15 மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சி மாலை 4.00 மணிவரை நடைபெற்றது. சுமார் ஆண்கள், பெண்கள் என 150 பேர் வரை கலந்து கொண்ட னர்.
மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சஞ்சிகை வெளியீட்டு விழாவின் பிரதம அதிதியாக Leicester City Councillor Abdul Osman (Assistant City Mayor Public Health) அவர்களும், விஷேட அதிதிகளாக Councillors Luis Fonseca, Jean Khote அவர்களும், கௌரவ அதிதிகளாக DR கமால் அப்துல் நாசர், அஷ் ஷைக் இஸ்மாயில் நலீமி, அஷ் ஷைக் சகரியா,, அஷ் ஷைக் ஆதில் ஹசன் மற்றும் யூசுப் சாம்பர்ஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் மேலும்- பல உலமாக்கள், சமூகத்தலைவர்கள், ஆண்கள் பெண்கள் சிறார்கள் என பலரும் கலந்து கொண்டனர் .
இஸ்லாஹ் டிரஸ்ட் இன் செயலாளர் சகோதரர் மிஷ்காத் அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து அஷ்ஷெய்க் முஹம்மது இஸ்மாயில் நலீமி (B.A இலங்கை) அவர்கள் சஞ்சிகையை அழகிய முறையில் அறிமுகபடித்தினார்.
சஞ்சிகையின் வெற்றிக்கு 1. தரமான ஆக்கங்கள் 2. தரமான வடிவமைப்பு 3. சிறந்த அறிமுக வெளியீடு ஆகிய அம்சங்கள் இன்றியமையாததென என்றும் அதன்படி இம்மூன்று அம்சங்களையும் கொண்டு 'அல் இஸ்லாஹ்' சஞ்சிகை அமைந்திருப்பது அதன் சிறப்புக்களில் ஒன்று என்பதனை சுட்டிக்காட்டியதோடு பெண்கள், ஆண்கள்,ஆலிம்கள், சிறார்கள் என்று பலரின் ஆக்கங்களும், இங்கிலாந்தில் முஸ்லிம்களின் ஆரம்பம், லெஸ்டரில் இலங்கை முஸ்லிங்களின் வரலாறு, லெஸ்டரில் பள்ளிகளின் முகவரிகள், பிள்ளை வளர்ப்பு, மார்கத்தின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு, அறிவு தேடுவதின் முக்கியத்துவம், சிறுவர் கட்டுரைகள், கவிதைகள், அரபு எழுத்தணி, சித்திரங்கள், இஸ்லாமிய வங்கி, இஸ்லாமிய சிந்தனைகள் என பலதும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
விசேட அதிதிகளின் சிறுசிறு உரைகளை தொடர்ந்து சஞ்சிகையின் முதல் பிரதியை இஸ்லாஹ் டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் சகோதரர் ரிபாய் ஜிப்ரி அவர்கள் விசேட அதிதி COUNCILLOR அப்துல் உஸ்மான் அவர்களுக்கு வழங்கினார். மேலும் டிரஸ்ட் அங்கத்தவர்களால் சிறப்பு அதிதிகளுக்கான சஞ்சிகை பிரதிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து சஞ்சிகையின் பிரதிகள் சமூகமளித்திருந்தவர்களுக்கு பகிரப்பட்டன. மேலும் www.islahtrust.co.uk என்ற இணையதளத்தை Dr. Kamal Abdul Nasar அவர்கள் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இறுதியாக இஸ்லாஹ் டிரஸ்ட் இன் தலைவர் ரிபாய் ஜிப்ரி அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிரலுக்கமைய அல்லாஹ்வின் அருளால் இஸ்லாஹ் டிரஸ்ட் இன் உப தலைவர் சகோதரர் அஜ்மீர் ஜமால்டீன் அவர்களின் தலைமையில் அனைத்து நிகழ்ச்சிகளும் அழகாக நடைப் பெற்று முடிந்தன. நிகழ்ச்சியின் புகைப் படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.




அல்லாஹ்வின் மார்க்கத்தை வியாபாரம் ஆக்குவதை ல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டித்து உள்ளார்கள்.
ReplyDelete