புதிய அரசாங்கம் இப்போதே, ஊழல் மோசடிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளது - லால்காந்த
அமைச்சர்களின் எண்ணிக்கையே இதுவரையில் அபிவிருத்தி அடைந்துள்ளது என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
இப்போதே அரசாங்கம் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதற்கு ஆரம்பித்துள்ளது என லால்காந்த சிங்கள பத்திரிகையொன்றுக்கு நேர் காணல் வழங்கியுள்ளார்.
போலியான தேசிய அரசாங்கத்தினால் ஒருபோதும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. தேசிய அரசாங்கத்தின் கீழ் நாடு அபிவிருத்தி அடைந்ததோ இல்லையோ, அமைச்சர்களின் எண்ணிக்கையே உயர்வடைந்துள்ளது.
இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும் நாட்டை அபிவிருத்தி செய்வதாக வாக்குறுதி அளித்த போதிலும் எந்தவொரு அரசாங்கமும் நாட்டை அபிவிருத்தி செய்யவில்லை.
இந்த அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் விவசாயிகள், தனியார்துறையினர், அரச ஊழியர்களின் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை. தற்போதைய அரசாங்கத்தில் கடந்த அரசாங்கத்தை விடவும் அதிகளவில் ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றன.

Post a Comment