மைத்திரியிடமிருந்து அகற்றபட்ட தஹம்
குடும்ப ஆதிக்கம் தொடர்பில் தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.
தமது தந்தையான மைத்திரிபாலவுடன் அவர் ஐக்கிய நாடுகளி;ன் உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்றமையை அடுத்தே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள தஹாம், தமது தாயாருக்கு கிடைத்த அழைப்பிற்கிணங்க அவர் சமுகம் தராமை காரணமாகவே தாம் தந்தையுடன் விஜயத்தில் பங்கேற்றதாக தெரிவித்திருந்தார்
இதற்கிடையில் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு முகநூலில் இருந்து மைத்திரி மற்றும் அவரின் மகன் ஒன்றாக உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்ற படங்களை அகற்றியிருந்தது.

Post a Comment