சுற்றுலா வீசா தொடர்பில், கடும் நடவடிக்கை
சுற்றுலா வீசா மூலம் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் நடவடிக்கைகள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் தலதா அத்துகொரல தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இவ்வாறானவர்களுக்கு எதிராக தராதரம் பாராது தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இவ்வாறான மோசடியான செயற்படுகள் காரணமாக இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுவதாகவும் அமைச்சர் தலதா அத்துக்கொரல தெரிவித்துள்ளார்.

Post a Comment