துருக்கி நாட்டை சேர்ந்தவருக்கும், இவ்வாண்டிற்கான நோபல் பரிசு
2015-ம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசை அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் துருக்கி நாடுகளை சேர்ந்த வேதியல் விஞ்ஞானிகள் மூவருக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வே நாட்டின் தலைநகரமான ஓஸ்லோ நகரில் 2015ம் ஆண்டிற்குரிய நோபல் பரிசுகளை பல்வேறு துறைகளில் உச்சம் பெற்ற அறிஞர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டவர்களை தெரிவு செய்யும் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக 2015ம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு வென்றவர்களின் பெயர்கள் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது.
இதில், அமெரிக்கா நாட்டை சேர்ந்த Paul Modrich, பிரித்தானியா நாட்டை சேர்ந்த Tomas Lindahl, துருக்கி நாட்டை சேர்ந்த Aziz Sancar என்ற விஞ்ஞானிகளுக்கு இவ்வாண்டிற்கான நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேதமடைந்த டி.என்.ஏ.-வை செல்கள் எவ்வாறு சரிசெய்கிறது என்பதை மூலக்கூறு மட்டத்தில் ஆராய்ச்சி செய்து நிகழ்த்திய கண்டுபிடிப்புகளுக்காக இவர்களுக்கு வேதியியல் நோபல் அளிக்கப்பட்டுள்ளது.
உயிருடன் இருக்கும் செல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்த அடிப்படை அறிவை இந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு அறிவியல் உலகிற்கு வழங்கியுள்ளது.
புற்றுநோய்க்கு எதிரான புதிய சிகிச்சை முறைகளில் இவர்களது கண்டுபிடிப்புகள் பெரும் பங்கு வகிக்கும் என நோபல் அகாடமி தெரிவித்துள்ளது.
இதில் துருக்கி விஞ்ஞானி Aziz Sancar புற ஊதாக்கதிர்களினால் சேதமடையும் டி.என்.ஏ. எப்படி உள்ளார்ந்த முறையில் சரி செய்யப்படுகிறது என்பதை கண்டுபிடித்துள்ளார்.
பிரித்தானியா விஞ்ஞானி Tomas Lindahl, செல்கள் பிரியும் போது டிஎன்ஏ தன்னை மறு உற்பத்தி செய்துகொள்ளும் நடவடிக்கையில் ஏற்படும் பழுதுகளை செல்கள் எப்படி சரி செய்கின்றன என்ற நடைமுறையை கண்டுபிடித்துள்ளார்.
இந்த கண்டுபிடிப்புகளால் நோய்களுக்கு, குறிப்பாக புற்றுநோய்களின் சிகிச்சையில் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment