பிரித்தானியாவில் ஸ்மார்ட் போன், வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு..!
ஸ்மார்ட்போன்களில் புகுந்த அதில் உள்ள தகவல்களை பிரித்தானிய அரசு திருடி வருகிறது என்று எட்வர்ட் ஸ்னோடன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், பிரித்தானிய அரசின் தகவல் தொடர்பு தலைமை அமைப்பு நினைத்தால் உலகின் எந்த மூலையில் இருப்பவரது ஸ்மார்ட் போனுக்குள்ளும் நுழைய முடியும்.
அவர்கள் போனில் என்ன செய்தி அனுப்புகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை உடனுக்குடன் பதிவு செய்ய முடியும். இதனை ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களே அறிய முடியாது.
மேலும், யாருடைய ஸ்மார்ட் போனில் உள்ள கமெரா மூலமும் புகைப்படம் கூட எடுக்க முடியும். அதனை போனின் உரிமையாளர்கள் தெரிந்து கொள்ளவே முடியாது.
தீவிரவாதிகள் தொடர்பான தகவல்களை அறிய பாகிஸ்தானில் இருந்துதான் பிரித்தானியா அதிக தகவல்களை ரகசியமாக திரட்டி யுள்ளது. அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனம் தயாரித்த ரூட்டர் கருவிகள் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
இதனை பிரித்தானிய அரசு உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. ஆனால் இந்த கண்காணிப்பு அமைப்பு தேவையான ஒன்று, அது கடுமையான சட்டவரம்புக்குள்தான் செயல்படுகிறது என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் உளவு ரகசியங்கள் பலவற்றை உலகுக்கு அம்பலப்படுத்தியர் ஸ்னோடன் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment