ஜனாதிபதி மைத்திரியின், புகைப்படத்தை பயன்படுத்தலாமா..?
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் புகைப்படங்களை பயன்படுத்த இடமளிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கும் சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமது எதிர்ப்பை பதிவு செய்த சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த பொதுத் தேர்தலின்போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் சில வேட்பாளர்கள் ஜனாதிபதி மைத்திரி மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோரின் புகைப்படங்களை பயன்படுத்தி வாக்குச் சேகரித்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலின்போது அவ்வாறான நிலைமை ஏற்பட இடமளிக்கக் கூடாது என்றும், சுதந்திரக் கட்சி வாக்குகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால, சுதந்திரக் கட்சியினர் எனது புகைப்படங்களை பயன்படுத்தத் தயங்கும் நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர் பயன்படுத்துவது பெரிய விடயமல்ல என்று சாதாரணமாக பதிலளித்துள்ளார்.

Post a Comment