Header Ads



தெ.கி.ப. மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதில் சிக்கலா..?

-மு.இ.உமர் அலி-

தென்கிழக்கு பல்கலைகழகத்தைச் சேர்ந்த இரண்டாம்,வருட மாணவர்கள் தங்குமிட  வசதிகளின்  போதாமை காரணமாக நிந்தவூரிலும் அட்டாளைச்சேனையிலும்   வைக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு  பலகலைக்கழக  நிருவாகமே  கட்டனம் செலுத்துகின்றது. 

இம்மாணவர்களினை உள்ளே  இருக்கும்  மாணவர்  விடுதிகளிற்கு உள்வாங்குமாறு  கோரி  இன்று தென்கிழக்கு பல்கலைக்கழக  மாணவர்கள் ஒன்றியம்    வளாகத்தினுள்ளே ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தது.

நிருவாகத்துக்கு  எதிரான கோசங்களை கோசித்துக்கொண்டு, பதாகைகளையும் சுலோகங்களையும் ஏந்திய வண்ணம் நிருவாக கட்டிடத்தின்முன்னர்  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டவர்கள்   பல்கலைக்கழக நிருவாக காரியாலயத்தின்மீது கல்வீச்சுக்களும் நடாத்தியுள்ளனர். பதிவாளர்,நிருவாக காரியாலயம் உட்பட மூன்று  காரியாலயங்களின்  கண்ணாடிகள் கல்வீச்சுக்குள்ளாகி  உடைந்துள்ளன.

பல்கலைக்கழக    நடைமுறைகளிற்கு  அப்பாற்பட்ட இந்த வேண்டுகோளினை  ஏற்றுக்கொள்வதில்  பல சிக்கல்கள் இருப்பதாக  தென்கிழக்கு பல்கலைக்கழக உயர்  அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

உபவேந்தர்  வெளிநாட்டு பயணம் ஒன்றினை  மேற்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த கலவரம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாடத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தமது  கோரிக்கைகள் என்ன என்று இதுவரை  எழுத்துமூலம்  விண்ணப்பிக்காத  நிலையில்  பிற்பகல் மூன்று மணியுடன்   கலைந்துசென்றுவிட்டனர்  என  குறித்த  உயர் அதிகாரி குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக  நிருவாகம் சேதங்களை மதிப்பீடு செய்துவருகின்றது.

2 comments:

  1. The decipline is very essential for the university students. There is no any decent way to express their requirements? Why they were making violence?

    ReplyDelete
  2. YES YOU ARE RIGHT. NOWADAYS STUDENTS DO NOT HAVE DISCIPLINE.

    ReplyDelete

Powered by Blogger.