கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் ஸ்தாபகர் தின விழா
1892ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கையில் மிகப் பழைமை வாய்ந்த முன்னோடி பாடசாலையான கொழும்பு ஸாஹிராக் கல்லூரியானது அதன் ஸ்தாபகர் தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடவுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 3ம் திகதி சனிக்கிழமை மு.ப. 10 மணிக்கு கல்லூரியின் மக்தூம் மண்டபத்தில் நடைபெறவுள்ள, ஸ்தாபகர் தினவிழாவில் சிறப்புப் பேச்சாளராக கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் கல்வித்துறை பீடாதிபதி பேராசிரியர். சந்திரசேகரன் கலந்து சிறப்பிக்கவுள்ளார். தேசிய நல்லிணக்கத்துக்கான கல்வியில் ஸாஹிராக் கல்லூரியின் பங்களிப்பு என்னும் தொனிப்பொருளில் அவர் சிறப்புரையாற்றுவார்.
கல்லூரியின் பழைய மாணவர்கள், பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் ஸ்தாபகர் தினப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களதும், ஆசிரியர்களதும் நிகழ்ச்சிகளும் இடம் பெறவுள்ளன.
அதிபர்
ஸாஹிராக் கல்லூரி
கொழும்பு

Post a Comment